தொகுதி மறுவரையறைக்கு ஸ்டாலின் எதிர்ப்பு: இன்று கருப்புக்கொடி போராட்டம் அறிவிப்பு
சென்னை: 'தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகம் முழுதும் இன்று கருப்புக் கொடி போராட்டம் நடத்தப்படும்' என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட வீடியோ பதிவில் கூறியுள்ளதாவது:
தொகுதி மறுவரையறை என்ற பெயரில் தன் லிமிட்டை தாண்டி, தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களை பா.ஜ., அரசு வஞ்சிக்கிறது. இன்று கொண்டு வரும் சட்டத் திருத்தத்தால், பெயரளவுக்கு தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கு தொகுதியை அதிகரிக்கிறோம் என சொல்லி விட்டு, அவர்களுக்கு சாதகமான வட மாநிலங்களுக்கு, மிக கூடுதலாக தொகுதிகளை அதிகரிக்கின்றனர்.
இதைத்தான் எங்களுக்கு இழைக்கப்படும் மாபெரும் அநீதி என சொல்கிறோம். மக்கள் தொகையை கட்டுப்படுத்தியதற்காக, தென் மாநிலங்களுக்கு தண்டனையா இது? தமிழர்களையும்-, தென் மாநில மக்களையும் இரண்டாம் தர குடிமக்களாக்க பிரதமர் மோடி பார்க்கிறார். டில்லி பா.ஜ.,வுக்கு தமிழர்கள் யார் என காட்ட வேண்டிய நேரம் வந்து விட்டது.
தமிழகத்தின் குரல் வளையை நெரிக்க நினைக்கும் மத்திய அரசுக்கு எதிராக, இன்று பார்லிமென்டில் கொண்டு வரப் போகும் சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பை காட்டும் வகையில், தமிழகத்தில் அனைவரும் வீட்டில் கருப்புக் கொடி ஏற்றுவோம்.
இது தமிழகத்திற்கும், டில்லிக்குமான தேர்தல் என நான் சொன்னதை, பா.ஜ., தொடர்ந்து நிரூபிக்கிறது. நான் சொன்னதன் உண்மையான அர்த்தத்தை பா.ஜ.,வே உணர்த்தி விட்டது. கருப்பு சட்டத்தை நிறைவேற்றக் கூடாது. தமிழகத்திலுள்ள 8 கோடி தமிழர்களின் ஒற்றை கோரிக்கை இது.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
@block_B@ 'தேர்தல் பணி பாதிக்கக்கூடாது' தி.மு.க., மாவட்டச் செயலர்கள், எம்.பி.,க்களுடன், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக முதல்வர் ஸ்டாலின் நேற்று அவசர ஆலோசனை நடத்தினார். அப்போது, ஸ்டாலின் பேசியதாவது: தனிப்பட்ட மனிதர்கள், அரசியல் கட்சிகளை விட, மக்களின் உரிமைகளை பாதுகாப்பது தான் நம் தலையாய கடமை. எனவே, அனைத்து அரசியல் கட்சிகளைச் சார்ந்தவர்களும், எம்.பி.,க்களும் ஜனநாயகத்தை காக்க ஓரணியில் திரள வேண்டும். தி.மு.க., - எம்.பி.,க்கள் அனைவரும் டில்லி சென்று, ஒருமித்த குரலில் போராட வேண்டும். நெருப்போடு விளையாடாதீர்கள் என்பதை சுட்டிக்காட்ட வேண்டும். நம் குரலை மதித்து, மத்திய அரசு பின்வாங்கும் வகையில், எம்.பி.,க்களின் குரல் ஓங்கி ஒலிக்கட்டும். தொகுதி மறுவரையறை சட்டத்திருத்தம் நிறைவேறுகிறதா என்பதை பார்த்து, அடுத்தக்கட்ட போராட்டத்தை நான் அறிவிப்பேன். கருப்புக் கொடி போராட்டத்தால் தேர்தல் பணி பாதிப்பதற்கு, மாவட்டச் செயலர்கள் இடம் கொடுத்து விடக்கூடாது. இவ்வாறு அவர் பேசியுள்ளார்.block_B
மாவட்டங்களை பிரித்து புதிய மாவட்டங்கள் உருவாக்கலாம் தமிழக அரசு
புதியதாக பல மாநகராட்சிகளை உருவாக்கலாம் தமிழக அரசு.
காரணம் நிர்வாக வசதி..
ஆனால் அதே நிர்வாக வசதிக்காக 10 லட்சம் மக்களுக்கு ஒரு எம்.பி. என மட்டும் தொகுதி வரையறையை செய்ய மத்திய அரசு திட்டமிட்டால் அது பாசிசம்.
கருப்பு கொடி காட்டுவோம்.
விடாது கருப்பு. தமிழகத்துக்கு நெருப்பு.
நாங்கள் மட்டும்கறுப்பு கொடி ஏற்ற வேண்டும். செய்த ஊழலில் இருந்து குடும்பத்தினரை காப்பாற்ற நீங்கள் மட்டும் யாருக்கும் தெரியாமல் வெள்ளை கொடி ஏந்திச் சென்று மோடியின் காலில் விழுந்து விட்டு வருவீர்கள். உங்க ரீல் எல்லாம் அறுந்து போச்சு.இனியும் எங்களை ஏமாற்ற முடியாது அப்பா.
தேர்தல் முடிவு வருவதற்கு முன்பே எதிர்க்கட்சி வரிசையில் சென்று அமர்வதற்கு தயாராகி விட்டார். ஏனென்றால் எதிர்க்கட்சியானால் கருப்புக்கொடி காட்டுவதும் ஆளுங்கட்சியானால் வெள்ளை குடை பிடிப்பதும் திமுக தலைமையின் வழக்கம்... எதிர்க்கட்சி தலைவராக கூட ஆக முடியுமா என்பது தேர்தல் முடிந்த பிறகு தான் உறுதியாகும்... ஸ்டாலின் அவர்களே அதுவரை எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்புக்கும் போட்டி போட வேண்டாம்...
தொகுதி மறு வரையறை எந்த மாநிலமும் எதிர்க்கவில்லை. ஸ்டாலின் தோற்றால், ஊழல் தடுப்பு கடுமையாக இருக்கும் என்று அஞ்சுகிறார்? கருணாநிதி குடும்பம் 100 ஆண்டுகள் ஆண்டால் , மாநில பற்று. பிறர் கால் பதித்தால், எதிர்ப்பு. தென் மாநிலங்கள் ஒன்று சேர்ந்து ஒரே கட்சியின் கீழ் போட்டியிட்டு அனைத்து தொகுதிகளிலும் வென்றால் பாதிக்காது. ஆதரித்து வெள்ளை கொடி ஏற்றினால் வெள்ளை தான் அதிகம் பறக்கும். ? அண்ணா திமுக ஆதரித்து, உடன் செயல்பட வேண்டும்.
தொகுதி வரையறை செய்ய பட வேண்டும். இது மக்களின் விருப்பம். மத்திய அரசுக்கு மக்களின் ஆதரவு நிச்சயமாக உண்டு
பாஸ் தமிழக மக்கள் தொகை 8.58 கோடி, அதாவது 2200000 பேருக்கு ஒரு பிரதிநிதி, கப்பல் வாங்க கல்வி தந்தை ஆக கொள்ளை அடிக்க அப்போ தான் முடியும், இதையே 55-59 பண்ணிட்டா,பெண்கள் 18-20 வரை கட்டாயம் ஆகிடுவாங்க, கனி அக்காவின் ஆளுமை அதிகம் ஆகும், கொள்ளை அடிப்பது குறையும், விடியலுக்கு அது பிடிக்காது
ஐந்து வருடம் முன்பு டாஸ்மாக்கை எதிர்த்து கருப்பு கொடி கட்டி போராட்டம் ஒன்னும் செய்ய முடியவில்லை கருப்பு துணி மற்றும் நேரம் தான் வேஸ்ட் போய் அவங்க அவங்க வேலை பாருங்க
இவர் முந்தய ஆட்சியின்போது கருப்பு கொடி ஏந்தி டாஸ்மாக் மது விற்பனைக்கு எதிராக போராடினார், பின்பு தி மு க ஆட்சிக்கு வந்ததும் டாஸ்மாக் டார்கெட் அதிகமாக விற்கச்சொல்லி ஆணை பிறப்பித்த நபர் தான் இவர், மக்கள் இவரையும் இவர் சொல்வது எதையும் நம்பமாட்டார்கள், தொகுதி மறுவரையறை வாக்காளர்களை அடிப்படையாக கொண்டது , இது அனைத்து மாநிலத்திற்கும் பொருந்தும், தமிழ்நாட்டுக்கு மட்டும் அல்ல மக்களே.
பியூஸ் கோயல் சரியாகத்தான் சொல்லியிருக்கிறார். எல்லா மாநிலங்களுக்கும் குறிப்பிட்ட அளவு மக்கள் தொகை இருந்தால் அதற்க்கு தகுந்தது போல தொகுதிகள் வரையறுக்கப்பட்ட வேண்டும். இதை எதிர்ப்பவர்கள் கட்சிகளை தடை செய்ய வேண்டும். கூட்டாட்சி என்ற உருட்டு வேறு உலவுகிறது.மேலும்
-
ஆந்திராவில் வேன் மீது டேங்கர் லாரி மோதி விபத்து; கர்நாடகா பக்தர்கள் 8 பேர் பலி
-
உட்கட்டமைப்பில் உலகளவில் உயரும் நம் நகரங்கள்; முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
-
3 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,400 அதிகரிப்பு
-
உலகில் செல்வாக்கு மிகுந்த 100 பேர்: டைம் இதழ் பட்டியலில் இந்தியர்கள் யார் யார்?
-
தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு: கருப்புக்கொடி ஏற்றி முதல்வர் ஸ்டாலின் போராட்டம்
-
ஓசையின்றி குடிநீர் கட்டணம் உயர்வு; வீட்டு உரிமையாளர்கள் புகார்