பஞ்சாப் தேர்தலுக்கு மத்திய அரசு தயார்: கெஜ்ரிவால் கிண்டல்
புதுடில்லி, பஞ்சாப் மாநிலத்தில், ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த பகவந்த் மான், முதல்வராக உள்ளார். அந்த மாநிலத்தில், 2022 மார்ச் மாதம் முதல், அவர் தலைமையிலான அரசு உள்ளது. அவரின் பதவிக்காலம், அடுத்த ஆண்டு வரை உள்ளது.
இந்நிலையில், அமலாக்க துறை யினரால், பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த, ஆம் ஆத்மி கட்சி பிரமுகர் அசோக்குமார் மிட்டலுக்கு சொந்தமான, பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.
அதை, கிண்டல் செய்யும் நோக்கில், ஆம் ஆத்மி கட்சி நிறுவனர் கெஜ்ரிவால் கூறும் போது, 'மத்திய அரசின் அமலாக்க துறையினரை வைத்து, ஆம் ஆத்மி கட்சியின் அசோக்குமார் மிட்டலுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டுள்ளது.
'இதை வைத்து பார்க்கும் போது, பஞ்சாப் மாநில சட்டசபை தேர்தலுக்கு மத்திய, பா.ஜ., அரசு தயாராகி விட்டது என்பது தெளிவாகிறது' என, கிண்டலாக கூறியுள்ளார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இளைஞர்களைக் கவர பிள்ளைகளை பிரசாரத்தில் இறக்கும் வேட்பாளர்கள்: அடுத்த தலைமுறை அரசியல்வாதிகள் ‛‛ரெடி''
-
குடும்ப அரசியல் வீழ 2026 தேர்தல் முடிவு முக்கியம்: அண்ணாமலை
-
பார்லி., சிறப்பு கூட்டத்தொடர் துவங்கியது; மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு மசோதா தாக்கல்
-
சென்னையில் ரூ.245 கோடி தங்க, வைர நகைகள் பறிமுதல்; பறக்கும் படை நடவடிக்கை
-
ஆந்திராவில் வேன் மீது டேங்கர் லாரி மோதி விபத்து; கர்நாடகா பக்தர்கள் 8 பேர் பலி
-
உட்கட்டமைப்பில் உலகளவில் உயரும் நம் நகரங்கள்; முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
Advertisement
Advertisement