கெஜ்ரிவாலுக்கு பிரச்னை என்றால் எந்த அமைப்பையும் கேள்வி கேட்பார் டில்லி முதல்வர் ரேகா குப்தா கோபம்

புதுடில்லி, டில்லி உயர் நீதிமன்றத்தின் கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில், நேற்று முன்தினம் ஆஜரான அரவிந்த் கெஜ்ரிவால், வழக்கறிஞர் போல தன் தரப்பு வாதங்களை எடுத்து வைத்தார்.

அவரை சாடும் விதத்தில், 'நீங்கள் பேசாமல் வழக்கறிஞர் ஆகியிருக்கலாம்' என, பெண் நீதிபதி ஸ்வர்ணா காந்தா சர்மா கூறினார்.

அதற்கு பதிலளித்துள்ள கெஜ்ரிவால், 'இப்போது நான் பார்க்கும் வேலையிலேயே திருப்தியாக உணர்கிறேன். தொடர்ந்து அந்த பணியாற்ற அனுமதிக்க வேண்டும்' என்றார். அந்த விவகாரத்தை நேற்று முன்தினம் எடுத்துள்ள டில்லி முதல்வர் ரேகா குப்தா கூறியதாவது:

நாட்டின் முக்கிய அமைப்புகளை கேள்விக்கு உரியதாக ஒரு மனிதர் ஆக்கியுள்ளார். அவரை பாராட்டும் போது, அந்த நிறுவனங்களின் செயல்பாடுகளை இவர் பாராட்டுவதும், அந்த அமைப்புகளால் அவர் கண்டிக்கப்படும் போது, அந்த நிறுவனங்களை இவர் கண்டிப்பதும் வழக்கமான ஒன்று.

இப்படித் தான் இதற்கு முன் சி.பி.ஐ., அமலாக்க துறையினர், தேர்தல் கமிஷன், பிரதமரின் அலுவலகம், துணை நிலை ஆளுநர் அலுவலகம் போன்றவற்றை கேள்விக்கு உரியதாக ஆக்கிய அந்த மனிதர், இப்போது, நீதிமன்றத்தின் செயல்பாடுகளை விமர்சித்துள்ளார்.

இதன் மூலம் தன் நிலைப்பாட்டை அவர் விளக்கியுள்ளார். அவரின் செயல்பாடு கடும் கண்டனத்திற்கு உரியது.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement