மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை எதிர்க்க முடிவு; இண்டி கூட்டணி கட்சிகள் திட்டவட்டம்
- நமது சிறப்பு நிருபர் -
''மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவுடன் இணைக்கப்பட்ட தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு, 'இண்டி' கூட்டணி கடும் எதிர்ப்பு தெரிவிக்கும்,'' என, காங்., தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இதனால், பார்லி.,யில் மகளிர் இட ஒதுக்கீடு திருத்த மசோதா நிறைவேறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
லோக்சபா மற்றும் மாநில சட்டசபைகளில் மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் 106வது அரசியல் சாசன சட்டத் திருத்தம், 2023 ஐ அமல்படுத்துவதற்கான சட்டத் திருத்த மசோதா இன்று முதல், 18ம் தேதி வரை நடக்கும் பார்லி., சிறப்பு கூட்டத் தொடரில் அறிமுகமாக உள்ளது.
மேலும், 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில், தொகுதிகளை மறுவரையறை செய்வதற்கான தொகுதி மறுவரையறை மசோதா மற்றும் டில்லி, ஜம்மு - காஷ்மீர் மற்றும் புதுச்சேரி ஆகிய மூன்று யூனியன் பிரதேசங்களில் உள்ள சட்டசபைகளில், மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் மசோதாக்களை அறிமுகப்படுத்தவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
உள்நோக்கம்
இந்நிலையில், மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவுடன் இணைக்கப்பட்ட தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு 'இண்டி' கூட்டணி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக 'இண்டி' கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் டில்லியில், காங்., தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் நேற்று நடந்தது.
இதில், காங்., எம்.பி., ராகுல், தி.மு.க., எம்.பி., டி.ஆர்.பாலு, ராஷ்ட்ரீய ஜனதா தலைவர் தேஜஸ்வி யாதவ், திரிணமுல் மூத்த தலைவர் சஹாரிகா கோஷ், சிவசேனா உத்தவ் பிரிவு மூத்த தலைவர் சஞ்சய் ராவத், தேசியவாத காங்., சரத் பவார் அணியின் எம்.பி., சுப்ரியா சுலே, சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மல்லிகார்ஜுன கார்கே கூறுகையில், ''மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவுக்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனால், அந்த மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்த விதம் தான் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. அரசியல் உள்நோக்கத்துடன் திருத்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது. மத்திய அரசு எதிர்க்கட்சிகளை முடக்கப் பார்க்கிறது.
''தொகுதி மறுவரையறை விவகாரத்தில் தந்திரம் செய்கின்றனர். எனவே, எதிர்க்கட்சிகள் ஒற்றுமையுடன் செயல்பட்டு, பார்லி.,யில் போராடும். மசோதாவுக்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறோம். ஆனால், மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை எதிர்க்கவில்லை.
''மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை தொடர்ந்து ஆதரித்து வந்தாலும், முந்தைய திருத்தங்களையே அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்துகிறோம். தொகுதி மறுவரையறை நடைமுறை குறித்து அரசியல் கட்சிகளிடையே நீண்ட காலமாகவே சில கவலைகள் நிலவி வருகின்றன,'' என்றார்.
பிரதிநிதித்துவம்
காங்., பொதுச்செயலர் ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது: லோக்சபா தொகுதிகளின் எண்ணிக்கை 50 சதவீதம் வரை உயரும் என மசோதா குறிப்பிடுகிறது. ஒவ்வொரு மாநிலத்தின் மக்கள் தொகைக்கு ஏற்ப, ஒரே சீராக தொகுதிகள் மறுவரையறை நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அரசு சொல்கிறது.
எனினும் மாநிலங்களின் விகிதாசாரப் பிரதிநிதித்துவத்தை பராமரிப்பதற்கான எந்தவொரு விதியும் இம்மசோதாக்களில் இடம் பெறவில்லை. இதன் விளைவாக, லோக்சபாவில் பல மாநிலங்கள் தங்களது பிரதிநிதித்துவத்தை இழக்க நேரிடும்.
மகளிருக்கு மூன்றில் ஒரு பங்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். ஆனால், அது தற்போதைய லோக்சபாவின், 543 பலத்தை அடிப்படையாக கொண்டு நடைமுறைப்படுத்த வேண்டும். இதையே அனைத்து எதிர்க்கட்சிகளும் விரும்புகின்றன.
தவிர, மகளிர் இட ஒதுக்கீடு சட்டம், 2029 லோக்சபா தேர்தலில் இருந்தே அமல்படுத்தப்படவுள்ளது. எனவே, தற்போதைய தொகுதி மறுவரையறை மசோதாவை எதிர்க்க, அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒருமனதாக முடிவு செய்துள்ளன. லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில் இம்மசோதா குறித்த விவாதத்தின்போது கடுமையாக எதிர்ப்பு தெரிவிப்போம்.
சந்தேகம்
தேர்தலில் ஆதாயம் பெற வேண்டும் என்பதற்காக, தொகுதி மறு வரையறை விவகாரத்தை ஆளும் பா.ஜ., அரசு அரசியல் கருவியாக பயன்படுத்த பார்க்கிறது. ஐந்து மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடந்து வரும் சூழலில், இந்த திருத்த மசோதாக்கள் கொண்டு வந்து இருப்பது தான் எதிர்க்கட்சிகளுக்கு வலுவான சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
கடந்த 2024 லோக்சபா தேர்தலின்போது மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை அமல்படுத்த வேண்டும் என காங்., கோரியது. ஆனால், அந்த சமயத்தில் அந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.
@quote@ திசை திருப்ப முயற்சி
தென் மாநில மக்களை சிலர் தவறாக திசை திருப்ப பார்க்கின்றனர். மகளிர் இட ஒதுக்கீடு தொடர்பாக தவறான தொகுதி மறுவரையறை புள்ளிவிபரங்களை வழங்கி, தென் மாநிலங்களை சிலர் குழப்புகின்றனர். லோக்சபா மற்றும் மாநில சட்டசபைகளில் மகளிருக்கு இட ஒதுக்கீடு வழங்குவதில் எவ்வித அரசியலும் இருக்கக் கூடாது.
--கிரண் ரிஜிஜு, பார்லி., விவகாரத்துறை அமைச்சர், பா.ஜ.,quote
@block_B@ பார்லி.,யில் சந்தேகம் தீரும்
மகளிர் இட ஒதுக்கீடு மசோதா குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் கூறியதாவது: மகளிர் இட ஒதுக்கீடு மசோதா குறித்து எதிர்க்கட்சிகளுக்கு எழுந்து இருக்கும் அனைத்து சந்தேகங்களுக்கும் பார்லி., சிறப்பு கூட்டத் தொடரில் விளக்கம் தரப்படும். மசோதாக்கள் விவாதத்திற்கு வரும்போது, இது குறித்த முழுமையான சட்ட நுணுக்கங்களும், மாற்றங்களும் எதிர்க்கட்சிகளுக்கு தெளிவாக விளக்கப்படும். அப்போது மசோதா குறித்து எழுந்த சந்தேகங்களும், தவறான அபிப்பிராயங்களும் மறைந்துவிடும். இவ்வாறு மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.block_B
@block_G@ எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது ஏன்?
* மக்கள் தொகையை சிறப்பாக கட்டுப்படுத்திய தமிழகம், கேரளா போன்ற தென் மாநிலங்கள் இந்த மசோதாவால் பாதிக்கப்படும் என, எதிர்க்கட்சிகள் கருதுகின்றன. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில், லோக்சபா இடங்கள் அதிகரிக்கப்பட்டால், உத்தர பிரதேசம், பீஹார் ஆகிய மாநிலங்களின் பலம், 120ல் இருந்து 180 ஆக அதிகரிக்கும். அதே சமயம், தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் இந்த அளவுக்கு உயராது. இது, பார்லி.,யில் வட மாநிலங்களின் ஆதிக்கத்தை அதிகரித்து, தென் மாநிலங்களின் அரசியல் செல்வாக்கை குறைக்கும் என, எதிர்க்கட்சிகள் அஞ்சுகின்றன
* தமிழகம் மற்றும் மேற்கு வங்கத்தில், விரைவில் சட்டசபை தேர்தல் நடக்கிறது. தேர்தல் பணிகளில் அந்த மாநிலங்களின் எம்.பி.,க்கள் ஈடுபட்டுள்ள நிலையில், பார்லி., சிறப்பு கூட்டத்தொடரை அவசர அவசரமாக கூட்டுவது ஏன் என, எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்புகின்றன. இது தேர்தல் நடத்தை விதிமீறல் என்றும், அரசியல் ஆதாயம் தேடும் உத்தி என்றும் குற்றஞ்சாட்டுகின்றன
* மகளிர் இட ஒதுக்கீடு என்ற பெயரில், தொகுதி மறுவரையறை போன்ற சர்ச்சைக்குரிய விஷயங்களை மத்திய அரசு கொல்லைப்புறம் வழியாக நுழைக்க முயற்சிப்பதாக எதிர்க்கட்சிகள் சந்தேகிக்கின்றன. இது குறித்து விவாதிக்க அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்ற கோரிக்கையை அரசு நிராகரித்தது, எதிர்க்கட்சிகளின் சந்தேகத்தை வலுப்படுத்தியுள்ளது
* மகளிர் இட ஒதுக்கீட்டில், எஸ்.சி., - எஸ்.டி., பெண்களுக்கு ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ள நிலையில், ஓ.பி.சி., பெண்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என, எதிர்க்கட்சிகள் வலியுறுத்துகின்றன. ஆனால், இதை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை
* புதிய மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தாமலேயே, பழைய தரவுகளின் அடிப்படையில் அல்லது அரசின் விருப்பப்படி தொகுதிகளை மறுவரையறை செய்ய இந்த மசோதா அதிகாரம் அளிக்கிறது. இது ஜனநாயகத்திற்கு எதிரானது என, எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டுகின்றன.block_G
@block_Y@ 'தென் மாநிலங்கள் கவலைப்பட வேண்டாம்'
தொகுதி மறுவரையறை திருத்த மசோதா குறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது: மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவுடன் இணைக்கப்பட்ட தொகுதி மறுவரையறை திருத்த மசோதா நிறைவேறினால், லோக்சபாவில் அனைத்து மாநிலங்களுக்கும் உரிய பிரதிநிதித்துவம் கிடைக்கும். எனவே, தென் மாநிலங்கள் இதை கண்டு அஞ்ச தேவையில்லை.
மாநிலங்களுக்கு தற்போது இருக்கும் பிரதிநிதித்துவ விகிதாசாரங்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அது அப்படியே தொடரும். லோக்சபாவில் தற்போது உள்ள தொகுதிகளின் எண்ணிக்கை 50 சதவீத அளவுக்கு உயரும். அவ்வாறு உயரும் போது, ஒவ்வொரு மாநிலத்திற்குமான தொகுதிகளும் 50 சதவீத அளவுக்கு உயரும். இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.block_Y
மொத்த இண்டி கூட்டணியும்.... மகளிருக்கு எதிரான மனநிலை கொண்டவர்கள்.... பெண்கள் அதிகாரத்துக்கு வருவதை விரும்பாதவர்கள்..... பெண்கள் இண்டி கூட்டணி ஆட்களுக்கு தகுந்த பாடம் புகட்ட வேண்டும்.
It is pathetic that even educated and highly qualified people are also coalescing with Kharge in congress
தென் இந்தியா .. தேவையயா
தீமக்காவுடன் சேர்ந்தவுடன் இவர்களுக்கு இருந்த அடிப்படை அறிவு மாயமாக மறைந்து விட்டது.
காங்கிரஸ் எதிர்க்கும்,அப்போ இந்திய மக்களுக்கு இதில் எதுவோ நன்மை இருக்கு , இதுதான் கடந்த கால வரலாறு
முற்றிலுமாக உண்மைமேலும்
-
துணை முதல்வர் உதயநிதி கோவையில் பிரசாரம்
-
மார்க்சிஸ்ட் கம்யூ. ஆர்ப்பாட்டம்
-
ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளர்களின்... படத்தை பார்க்கலாம்!உடுமலை, மடத்துக்குளம் தொகுதிகளில் தீவிரம்
-
தபால் ஓட்டுப்பதிவு செய்த தேர்தல் அலுவலர்கள்
-
விளையாட்டு சிட்டி கிளப் டென்னிஸ் தொடர் ரான்சா கிளப் அணி அபார வெற்றி
-
முந்தி செல்லும் போட்டியில் வாலிபர் பரிதாபமாக உயிரிழப்பு