நொய்டாவில் தொடரும் போராட்டங்கள் அமைதி முயற்சியில் போலீசாருக்கு வெற்றி

நொய்டா, கிரேட்டர் நொய்டா பகுதியில் உள்ள தாத்ரியில் தனியார் பல்கலைக்கழகம் உள்ளது. அந்த பல்கலைக்கழகத்தின் ஆண், பெண் ஊழியர்கள் நேற்று திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நீண்ட காலமாக தாங்கள் மிகக்குறைந்த சம்பளத்தில் வேலை பார்க்கிறோம்; சம்பள உயர்வு வேண்டும். 'ஓவர்டைம்' எனும் கூடுதல் நேரம் வேலை பார்த்தால், இரட்டிப்பு பணம் வழங்க வேண்டும் என கோரி, அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த திங்கள் கிழமை நொய்டா பகுதியில் உள்ள தொழிற்சாலைகளில் நிகழ்ந்த போராட்டங்கள், வன்முறையில் முடிந்ததை அடுத்து, நொய்டாவில் போலீஸ் அதிகாரிகளின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதால், பல்கலைக்கழக ஊழியர்களின் போராட்டம் பற்றி அறிந்ததும், போலீஸ் அதிகாரிகள் அவர்களுடன் பேச்சு நடத்தி, போராட்டத்தை வாபஸ் பெற வைத்தனர்.

அதுபோலவே, நேற்று முன்தினமும் நடந்தது. நொய்டாவில் உள்ள பிரிமியம் வில்லாக்களில் பணியாற்றும் ஊழியர்கள் நுாற்றுக்கணக்கானோர் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திங்கள் கிழமை நடந்த போராட்டத்தால், பிரச்னையை சந்தித்த அந்த பகுதி போலீசார், இந்த போராட்டத்தையும் நசுக்கும் விதத்தில் செயல் பட்டனர்.

அவர்களின் போராட்டங்களையும், போலீசார் நசுக்கும் விதத்தில், அனைத்து கோரிக்கைகளும் ஏற்கப்படும்.

அதற்கான பேச்சு நடத்தப்படும் என ஊழியர்களிடம் தெரிவித்து, போராட்டத்தை பிசுபிசுக்க வைத்தனர்.

நொய்டா பகுதியில் பலதரப்பு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதும், போலீசார் மேற்கொண்டு வரும் அமைதி பேச்சில் அவர்கள் வெற்றி பெறுவதும் தொடர்கதையாக நடந்து வருகிறது.

Advertisement