அனுமதியின்றி சைக்கிள் பேரணி: த.வெ.க., வேட்பாளர் மீது வழக்கு
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் அனுமதி பெறாமல் சைக்கிள் பேரணி சென்ற த.வெ.க., வேட்பாளர் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி த.வெ.க., வேட்பாளர் அருள்விக்னேஷ் தனது கட்சி நிர்வாகிகளுடன் நேற்று முன்தினம் சைக்கிள் பேரணி சென்று பொதுமக்களிடம் ஓட்டு சேகரித்தார். கள்ளக்குறிச்சி தீயணைப்பு நிலையத்தில் இருந்து சேலம் மெயின்ரோடு, கவரைத்தெரு வழியாக சைக்கிள் பேரணி நடந்தது. இந்நிலையில் கள்ளக்குறிச்சி நிலையான கண்காணிப்பு குழு அலுவலர் விஜயகுமார் உரிய அனுமதி பெறாமல் த.வெ.க., நிர்வாகிகள் சைக்கிளில் பேரணியாக சென்றதாக போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், த.வெ.க., வேட்பாளர் அருள்விக்னேஷ் உட்பட அக்கட்சி நிர்வாகிகள் 50 பேர் மீது கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வீடுகள் கட்டித்தரக்கோரி பளியன்குடியில் ஓட்டு போட மறுத்த பழங்குடியின மக்கள் - பேச்சுவார்த்தைக்குப் பின் ஓட்டளித்தனர்
-
மறவபட்டியில் இரவு 7:15 வரை நீடித்த ஓட்டுப்பதிவு
-
ஓட்டுச் சாவடிகளில் தேர்தல் பார்வையாளர்கள் ஆய்வு
-
வேட்பாளர்கள் நேருக்கு நேர் சந்திப்பு
-
3 இடங்களில் தாமதமாக துவங்கிய ஓட்டுப்பதிவு
-
வண்ணமயமான ஓட்டுச்சாவடிகள்
Advertisement
Advertisement