நல்லாட்சி அமைய அ.தி.மு.க., வுக்கு வாக்களியுங்கள்; வேட்பாளர் குமரகுரு பேச்சு

உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை தொகுதி அ.தி.மு.க., கூட்டணி வேட்பாளர் குமரகுரு, பைக் பேரணி சென்று இரட்டை இலை சின்னத்திற்கு ஓட்டு சேகரித்து பேசியதாவது; தி.மு.க., ஸ்டாலின் ஆட்சி மக்களுக்கான திட்டங்களை நிறைவேற்றும் ஆட்சியாக நடத்தாமல், விளம்பர ஆட்சி நடத்தி வருகிறார். தேர்தலில் வாக்காளர்களுக்காக பணத்தை வாரி இறைப்பர். அந்த பணம் கொள்ளை அடிச்சு கொடுக்கிறாங்க. தி.மு.க.,வினர் உங்களிடம் இப்போ பணம் கொடுப்பாங்க, அப்புறம் உங்கள் உரிமைகளை பறித்துவிடுவாங்க. எனவே அதி.மு.க., நல்லாட்சி அமைய வாய்ப்பளியுங்கள்.

அ.தி.மு.க., ஆட்சி அமைந்தவுடன் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கும். உளுந்துார்பேட்டை தொகுதி மக்களுக்கான பல்வேறு திட்டங்கள் கொண்டு வந்து செயல்படுத்தப்படும். உளுந்துார்பேட்டை தொகுதியை ஒரு முன்மாதிரியான தொகுதியாக மாற்றப்படும்.

வேலையில்லா இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் வகையில் தொழிற்சாலைகள் உருவாக்கப்படும். முதல்வராக பழனிசாமி பொறுப்பற்றவுடன் தமிழகத்தில் இளைஞர்களை சீரழித்து வரும் கஞ்சா போதை முற்றிலுமாக ஒழிக்கப்படும். குற்ற சம்பவங்கள் நடக்காதவாறு சட்ட ஒழுங்கு பாதுகாக்கப்படும் என பேசினார்.

அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் செண்பகவேல், ஏகாம்பரம், சந்திரன், முன்னாள் ஒன்றிய துணை சேர்மன் சாய்ராம், பா.ம.க., மாவட்ட தலைவர் சத்யா, பா.ஜ., தொகுதி பொறுப்பாளர் அருள், த.மா.க., மாவட்ட தலைவர் அதையூர் பாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement