பணத்தை வீசி சென்ற கட்சியினர் கள்ளக்குறிச்சி போலீசார் விசாரணை

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் தேர்தல் அலுவலர்களை பார்த்ததும் பணத்தை வீசி விட்டு தப்பி சென்ற கட்சி நிர்வாகிகள் குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

கள்ளக்குறிச்சி அண்ணா நகர் பகுதியில் அரசியல் கட்சியினர் சிலர் வீடு, வீடாக சென்று வாக்காளர்களுக்கு பணம் விநியோகிப்பதாக தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று முன்தினம் புகார் சென்றது. இதையடுத்து நிலையான கண்காணிப்பு குழு அலுவலர் விஜயகுமார் தலைமையிலான குழுவினர் சம்பவ இடத்துக்கு சென்றனர். தேர்தல் அலுவலர்கள் வருவதை பார்த்ததும் அரசியல் கட்சியினர் பணத்தை கீழே போட்டு விட்டு ஓடினர். இதையடுத்து கீழே இருந்த ரூ. 26,500 பணத்தை தேர்தல் அலுவலர்கள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக போலீசிலும் புகார் அளித்தனர். அதன்பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து பணத்தை வீசி சென்ற மர்ம நபர்கள் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement