தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தை முடக்கிய தி.மு.க., வை விரட்டியடிப்போம் :அ.தி.மு.க., வேட்பாளர் பாண்டியன் பேச்சு 

சிதம்பரம்: தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தை நிறுத்திய தி.மு.க., வை விரட்டியடிப்போம் என சிதம்பரம் அ.தி.மு.க., வேட்பாளர் பாண்டியன் கூறினார்.

சிதம்பரம் தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் பாண்டியன், பரங்கிப்பேட்டை ஒன்றியம் அம்பிகாபுரம் கிராமத்தில் ஓட்டு கேட்டு பேசுகையில், ஏழை பெண்களின் நிலை அறிந்து, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தாலிக்கு தங்கம் திட்டத்தை துவங்கி, திருமணத்திற்கு 8 கிராம் தாலி வழங்கினார். அதனை பழனிசாமி தொடர்ந்து வழங்கி வந்தார். ஆனால் 2021ல் ஆட்சி பொறுப்பேற்ற தி.மு.க., இத்திட்டத்தை முடக்கியது. தாலிக்கு தங்கம் வாங்குவது ஏழை மக்களுக்கு எட்டாக்கனியாக மாறியுள்ளது. இத்திட்டத்தை முடக்கிய தி.மு.க., அரசை விரட்டியடிப்போம். மீண்டும் அ.தி.மு.க., ஆட்சி அமைத்ததும் அத்திட்டம் துவங்கப்படும் என பேசினார்.

நிகழ்ச்சியில், தொகுதி பொறுப்பாளர் செல்வி ராமஜெயம், ஒன்றிய செயலாளர்கள் அசோகன், சுந்தரமூர்த்தி, அவை தலைவர் குமார், முன்னாள் மாவட்ட செயலாளர் மாரிமுத்து, பா.ம.க.,மாவட்ட செயலாளர் மகேஷ், முன்னாள் மாவட்ட செயலாளர் முருகன், பா.ஜ., பாலசுப்ரமணியன், ராகேஷ், அ.ம.மு.க., மாவட்ட செயலாளர் மோகன், த.மா.கா., ரஜினிகாந்த், புதிய நீதி கட்சி நரசிம்மன், அமீர் பரந்தாமன், புரட்சி ஸ்டாலின் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Advertisement