கள்ளக்குறிச்சி வி.சி., வேட்பாளரை ஆதரித்து அமைச்சர் வேலு பிரசாரம்
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி தொகுதி வி.சி., வேட்பாளர் மாலதியை ஆதரித்து வடக்கு மண்டல தேர்தல் பொறுப்பாளர் அமைச்சர் வேலு பிரசாரம் செய்து பானை சின்னத்தில் ஓட்டு சேகரித்தார்.
தியாகதுருகம் பஸ் நிலையம் அருகே நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில், அவர் பேசுகையில், கடந்த 5 ஆண்டுகளாக தி.மு.க., ஆட்சியின் சாதனைகள், கள்ளக்குறிச்சி தொகுதியில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள் குறித்து பொதுமக்களிடையே எடுத்துரைத்து தமிழர்களின் அடையாளமான பானை சின்னத்தில் ஓட்டளித்து பெருவாரியான ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
கூட்டத்தில் தொகுதி பொறுப்பாளர்கள் மூக்கப்பன், மணிமாறன், சண்முகம், காங்., மாவட்ட தலைவர் இதயதுல்லா, தே.மு.தி.க., மாவட்ட செயலாளர் கருணாகரன், வி.சி., மாவட்ட செயலாளர் மதியழகன், தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் நெடுஞ்செழியன், அண்ணாதுரை, சத்தியமூர்த்தி.
மாவட்ட சேர்மன் புவனேஸ்வரி பெருமாள், கள்ளக்குறிச்சி நகர சேர்மன் சுப்ராயலு, செயற்குழு உறுப்பினர் எத்திராஜ், நிர்வாகி பாபு, ஒன்றிய சேர்மன் தாமோதிரன், பேரூராட்சி சேர்மன் வீரசாமி, துணை சேர்மன் சங்கர், தே.மு.தி.க., மாநில தொழிற்சங்க செயலாளர் தாமுசக்திவேல், ஒன்றிய செயலாளர் ஜெய்சங்கர், நகர செயலாளர் முருகன் உட்பட பலர் பங்கேற்றனர்.
மேலும்
-
மொபைல், கஞ்சா பயன்படுத்தும் கைதிகள் விசாரணைக்கு டி.ஜி.பி., தலைமையில் குழு
-
தமிழக லோக்சபா தொகுதிகள் 31 ஆகிவிடும் என்கிறார் உதயநிதி
-
வேலை இல்லாதவர்கள் போராட வேண்டும்: குமாரசாமி ஆவேசம்
-
மாண்டியாவில் இன்று 'ஸ்ரீ குரு பைரவைக்கிய கோவில்' திறப்பு பிரதமர் நரேந்திர மோடி வருகை
-
நந்தினிக்கு சிலிண்டர் பற்றாக்குறை: அமைச்சர் வெங்கடேஷ் மறுப்பு
-
மகளை கொன்று தாய் தற்கொலை: பண கஷ்டத்தால் விபரீத முடிவு