மாவட்டத்தில் தி.மு.க., வேட்பாளர்களை விட வி.சி.,வேட்பாளர் முதல் மார்க் எடுப்பார் அமைச்சர் வேலு நம்பிக்கை
கள்ளக்குறிச்சி: 'கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் போட்டியிடும் 3 தி.மு.க., வேட்பாளர்களை விட, வி.சி., வேட்பாளர் மாலதி முதல் மார்க் எடுப்பார்' என வடக்கு மண்டல தேர்தல் பொறுப்பாளர் அமைச்சர் வேலு பேசினார்.
தியாகதுருகம் பஸ் நிலையம் அருகே நடந்த பிரசாரத்தில் வி.சி., வேட்பாளர் மாலதியை ஆதரித்து அவர் பேசுகையில், 'மாவட்டத்தில் 3 தொகுதிகளில் தி.மு.க., சார்பில் ரிஷிவந்தியம் வசந்தம் கார்த்திகேயன், சங்கராபுரம் உதயசூரியன், உளுந்துார்பேட்டை வசந்தவேலு ஆகியோர் போட்டியிடுகின்றனர். கள்ளக்குறிச்சியில் சகோதரர் திருமாளவனின் சகோதரி மகள் மாலதி வி.சி., சார்பில் போட்டியிடுகிறார். இதில் தி.மு.க., வேட்பாளர்களை விட வி.சி., வேட்பாளர் மாலதி முதல் மார்க் எடுப்பார்.
கடந்த முறை கள்ளக்குறிச்சி தொகுதியில் நாங்கள் ஏமாற்றப்பட்டோம். ஆனாலும், கள்ளக்குறிச்சியை மாற்றந்தாய் போல் நடத்தவில்லை. எங்கள் சொந்த தாய் வீடு போல் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளோம். ஆனால் அ.தி.மு.க., ஆட்சியின் போது கொடுத்த வாக்குறுதிகள் எதையும் பழனிசாமி செய்யவில்லை.
தியாகருகம் பேரூராட்சி நகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும், தியாகதுருகம் ஊராட்சி ஒன்றியத்தை பிரித்து கண்டாச்சிமங்கலம் புதிய ஒன்றிய அலுவலகம், சின்னசேலம் ஒன்றியத்தை பிரித்து நைனார்பாளையம் ஒன்றியம் பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளுக்கு நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கு தேர்தலில் பானை சின்னத்திற்கு ஓட்டளிக்க வேண்டும்' என்றார்.
மேலும்
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.1280 அதிகரிப்பு
-
வேலூரில் முதல்வர் ஸ்டாலின்; வீடு வீடாக சென்று ஓட்டு சேகரிப்பு
-
தமிழக சட்டசபை தேர்தல்; பாஜ தேர்தல் அறிக்கை இன்று வெளியீடு
-
டில்லியில் துணை ஜனாதிபதி சிபிஆர் இல்லத்தில் பிரதமர் மோடி தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம்
-
அனல் பறக்கும் அரசியல் கள நிலவரம் என்ன; இன்றைய தினமலர் தேர்தல் களம்!
-
சினிமாவில் நடிக்க சிதம்பரம் மகனுக்கு ஆசை