ஜெருசலேம், ஹஜ் புனித பயணம் செல்ல பயணத் தொகை உயர்த்தி வழங்கப்படும்: பா.ம.க., வேட்பாளர் செழியன் உறுதி
ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் பா.ம.க., வேட்பாளர் செழியன் அ.தி.மு.க., வின் தேர்தல் வாக்குறுதிகளை கூறி கிறிஸ்தவ, இஸ்லாமிய மக்களிடம் ஓட்டு சேகரித்தார்.
ரிஷிவந்தியம் தொகுதியில், ஈருடையாம்பட்டில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்திற்கும், மங்கலம் தக்காவில் உள்ள தர்காவிற்கும் சென்று மதபோதகர்களிடம் ஆசி பெற்றார். அங்கு அவர் பேசுகையில், 'கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமிய மக்கள் நலனில் அ.தி.மு.க., தனி கவனம் செலுத்துகிறது.
அதன்படி, ஜெருசேலம் புனித பயணம் செல்லும் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கையும், ஹஜ் பயணம் செல்லும் இஸ்லாமியர்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்கப்படும். இதற்கான பயண செலவுத்தொகை உயர்த்தி வழங்கப்படும்.
கிறிஸ்தவர்கள் கல்லறைத் தோட்டம் அமைக்க இடவசதி அமைக்கப்படும், உம்ரா (மெக்கா - மதினா) பயணத்திற்கு கூடுதல் மானியம் வழங்கப்படும். கடந்த தி.மு.க., ஆட்சியில் சட்டம், ஒழுங்கு சீர்கெட்டுப் போனது.
எனவே, தமிழ்நாடு அமைதி பூங்காவாக இருக்க அ.தி.மு.க., சார்பில் போட்டியிடும் எனக்கு மாம்பழம் சின்னத்தில் ஓட்டளிக்க வேண்டும்' என்றார்.
அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் துரைராஜ், நிர்வாகி ராமு, பா.ஜ., முன்னாள் மாவட்ட பொதுச் செயலாளர் ஜெயதுரை மற்றும் கட்சியினர் உடனிருந்தனர்.
மேலும்
-
அனல் பறக்கும் அரசியல் கள நிலவரம் என்ன; இன்றைய தினமலர் தேர்தல் களம்!
-
சினிமாவில் நடிக்க சிதம்பரம் மகனுக்கு ஆசை
-
ஊழல் செய்தால் ரத்த வாந்தி; சுடுகாட்டில் சுயேச்சை பூஜை
-
'அவை குறிப்பிலிருந்து நீக்க முடியாது' ; சபாநாயகரை கலாய்த்த இளைஞர்கள்
-
மது குடிப்போர் சங்கத்திற்கு ராமதாஸ் சின்னம்
-
கருணாசுக்கு 'நோ' ; தி.மு.க.,வினர் அடம்