மீண்டும் தி.மு.க.. ஆட்சி அமைந்தால் தொகுதிக்கு நலத்திட்டங்கள் தொடரும் :அமைச்சர் வேலு பேச்சு
உளுந்துார்பேட்டை: 'மீண்டும் தி.மு.க.. ஆட்சி அமைந்தால் உளுந்துார்பேட்டை தொகுதிக்கு பல்வேறு திட்டங்கள் கொண்டு வந்து செயல்படுத்தப்படும்' என உளுந்துார்பேட்டையில் தி.மு.க.. வேட்பாளர் வசந்தவேலை ஆதரித்து அமைச்சர் வேலு பேசினார்.
பிரசாரத்தில் அவர் பேசுகையில், 'உளுந்துார்பேட்டை தொகுதியில் போட்டியிடும் தி.மு.க., கூட்டணி வேட்பாளர் வசந்தவேலை பெருவாரியான ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும். தமிழகத்தில் 5 ஆண்டு காலம் திராவிட மாடல் ஆட்சி நடந்தது. தி.மு.க., ஆட்சிக் காலத்தில் பல்வேறு திட்டங்கள் கொண்டு வந்து செயல்படுத்தப்பட்டுள்ளன.
இந்த தேர்தல் தமிழ்நாட்டிற்கும், டில்லிக்குமான தேர்தலாகும். டில்லி தோற்கடிக்கப்படவேண்டும். தமிழகம் வெற்றி பெற வேண்டும்.
மீண்டும் தி.மு.க.. ஆட்சி அமைந்தால் உளுந்தூர்பேட்டை தொகுதிக்கு பல்வேறு திட்டங்கள் கொண்டு வந்து செயல்படுத்தப்படும்' என்றார்.
நகர மன்ற தலைவர் திருநாவுக்கரசு, ஒன்றிய செயலாளர்கள் வைத்தியநாதன், ராஜவேல், முருகன், தலைமை செயற்குழு உறுப்பினர் விஜயகுமார், ம.தி.மு.க., மாவட்ட செயலாளர் ஜெய்சங்கர். காங்., மாநில துணைச் செயலாளர் சீனிவாசன், வி.சி., மாவட்ட பொருளாளர் கனக அம்பேத். கம்யூ., மாவட்ட செயலாளர் ஜெய்சங்கர் உட்பட பலர் பங்கேற்றனர்.
மேலும்
-
அனல் பறக்கும் அரசியல் கள நிலவரம் என்ன; இன்றைய தினமலர் தேர்தல் களம்!
-
சினிமாவில் நடிக்க சிதம்பரம் மகனுக்கு ஆசை
-
ஊழல் செய்தால் ரத்த வாந்தி; சுடுகாட்டில் சுயேச்சை பூஜை
-
'அவை குறிப்பிலிருந்து நீக்க முடியாது' ; சபாநாயகரை கலாய்த்த இளைஞர்கள்
-
மது குடிப்போர் சங்கத்திற்கு ராமதாஸ் சின்னம்
-
கருணாசுக்கு 'நோ' ; தி.மு.க.,வினர் அடம்