ஏழை மக்களுக்கு வீடு கட்டித்தரப்படும் ! தி.மு.க. கூட்டணி வேட்பாளர் நித்தியானந்தன் உறுதி
பொள்ளாச்சி: தி.மு.க., தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில், பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் நித்தியானந்தன், கூட்டணி கட்சி நிர்வாகிகளோடு இணைந்து பிரசாரம் செய்து வருகிறார்.
இவருக்கு, பொள்ளாச்சி தெற்கு நகர பொறுப்பாளர் அமுதபாரதி, நகராட்சி தலைவர் சியாமளா, துணை தலைவர் கவுதமன் மற்றும் கவுன்சிலர் செந்தில்குமார், ம.தி.மு.க., மாவட்ட செயலாளர் செந்தில், தி.மு.க., மாவட்ட கலை, இலக்கிய பகுத்தறிவு பேரவை துணை அமைப்பாளர் சதீஷ்குமார் மற்றும் நிர்வாகிகள் வரவேற்பு அளித்து, ஓட்டு சேகரித்தனர்.
தி.மு.க., கூட்டணி வேட்பாளர் நித்தியானந்தன், தி.மு.க., அரசின் சாதனைகளை விளக்கி பேசியதாவது:
தமிழக முதல்வர் ஸ்டாலின் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தியதால், இந்தியாவில், நம்பர் ஒன் மாநிலமாக தமிழகம் மாறியுள்ளது. மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை எதிர்கட்சியினர் செயல்படுத்த முடியாது எனக்கூறிய போதும், அதை செயல்படுத்தி காட்டினார். முடியாது என்பதையும் முடியும் என மாற்றி காட்டக்கூடிய வல்லமை கொண்டவர் முதல்வர்.
சொன்னது மட்டுமின்றி, சொல்லாததையும் செய்து மக்களிடம் நன்மதிப்பை முதல்வர் பெற்றுள்ளார். மீண்டும் தி.மு.க., ஆட்சிக்கு அமைந்தால், 8,000 ரூபாய் மதிப்புள்ள கூப்பன் பயன்படுத்தி வாஷிங் மெஷின், 'டிவி', ப்ரிட்ஜ், மிக்ஸி, மைக்ரோவேவ் ஓவன் மற்றும் மின் அடுப்புகள் போன்ற வீட்டு உபயோக பொருட்களை இல்லத்தரசி திட்டத்தின் கீழ் வாங்கி கொள்ளலாம்.
மேலும், 10 லட்சம் புதிய வீடுகள் கட்டித்தரப்படும் என முதல்வர் தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளார். பொள்ளாச்சி தொகுதியில் வெற்றி பெற்ற பின், நேரு நகர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் வசிப்போரின் வீடுகளை புதுப்பித்து தர முயற்சிகளை எடுப்பேன்.
இந்த முறை, பொள்ளாச்சி தொகுதியில் தி.மு.க., வை வெற்றி பெற வைக்க பொதுமக்கள் தயராகி விட்டனர். ஓட்டு சேகரிக்க செல்லும் இடங்களில் எல்லாம் பொதுமக்கள் கொடுக்கும் வரவேற்பே அதற்கு சாட்சியாக உள்ளது. பொள்ளாச்சியின் வளர்ச்சிக்கு தேவையான திட்டங்களை செயல்படுத்த அனைத்து முயற்சிகளும் எடுப்பேன்.
இவ்வாறு, பேசினார்.
மேலும்
-
பார்லி., சிறப்பு கூட்டத்தொடர் துவங்கியது; மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு மசோதா தாக்கல்
-
சென்னையில் ரூ.245 கோடி தங்க, வைர நகைகள் பறிமுதல்; பறக்கும் படை நடவடிக்கை
-
ஆந்திராவில் வேன் மீது டேங்கர் லாரி மோதி விபத்து; கர்நாடகா பக்தர்கள் 8 பேர் பலி
-
உட்கட்டமைப்பில் உலகளவில் உயரும் நம் நகரங்கள்; முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
-
3 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,400 அதிகரிப்பு
-
உலகில் செல்வாக்கு மிகுந்த 100 பேர்: டைம் இதழ் பட்டியலில் இந்தியர்கள் யார் யார்?