ஐயப்பன் கோவிலில் 10,000 பேருக்கு 1 ரூபாய் நாணயம்

சேலம் சேலம்-பெங்களூரு பைபாஸ் ரோட்டில் அமைந்துள்ள, ஐயப்பா ஆஸ்ரமத்தில் இன்று விஷூ கனி தரிசனத்தை முன்னிட்டு அதிகாலை, 4:30 மணிக்கு நடைதிறக்கப்பட்டு கணபதி ஹோமம், 5:00 மணிக்கு சுவாமிக்கு கனி அலங்காரம் செய்யப்பட்டு, 1 ரூபாய் நாணயங்களால்
ஐயப்பனுக்கு பூஜை செய்யப்படுகிறது.

விஷூ கனி தரிசனத்தை காண வரும் பக்தர்கள் அனைவருக்கும், ஐயப்பன் பிரசாதமாக லட்டு மற்றும் பூஜை செய்யப்பட்ட 1 ரூபாய் நாணயம், 10 ஆயிரம் பேருக்கு வழங்கப்படுகிறது. மேலும் அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்படுகிறது.

மாலை, 7:00 மணிக்கு சிறப்பு பகவதி சேவை, 8:30 மணிக்கு அத்தாழ பூஜை தீபாராதனை நடைபெறுகிறது. எனவே பக்தர்கள் வருகை புரிந்து, விஷூ தினத்தில் ஐயப்பனை தரிசனம் செய்து அருளை பெற, கோவில் நிர்வாகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்
பட்டுள்ளது.

Advertisement