பாமாயில் இறக்குமதி 19% குறைந்தது

மும்பை, ஏப். 14-

நம் நாட்டின் பாமாயில் இறக்குமதி கடந்த மார்ச் மாதத்தில், 19 சதவீதம் குறைந்துள்ளதாகவும் மொத்த சமையல் எண்ணெய் இறக்குமதி 9 சதவீதம் குறைந்துள்ளதாகவும் இந்திய எண்ணெய் பிரித்தெடுப்பு சங்கம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அச்சங்கம் தெரிவித்துள்ளதாவது:

நாட்டின் பாமாயில் இறக்குமதி கடந்த டிசம்பர் மாதத்தில் 8,47,689 டன்னாக இருந்த நிலையில், மார்ச் மாதத்தில் 6,89,462 டன்னாக குறைந்துள்ளது. கடந்த மூன்று மாதங்களில் இது மிகவும் குறைவாகும். அதேபோல் சோயா எண்ணெய் இறக்குமதி 4 சதவீதம் குறைந்துள்ளது. சூரியகாந்தி எண்ணெயின் இறக்குமதி 35 சதவீதம் உயர்ந்துள்ளது.

நாட்டின் மொத்த சமையல் எண்ணெய் இறக்குமதி கடந்த பிப்ரவரியுடன் ஒப்பிடும்போது, மார்ச் மாதத்தில் 9 சதவீதம் குறைந்துள்ளது. கடந்த ஏப்ரல் 2025ல் இருந்து பாமாயில் மற்றும் சோயா எண்ணெய் இறக்குமதி மார்ச் மாதத்தில் மிகவும் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நாட்டின் சமையல் எண்ணெய் இறக்குமதியாளர்கள் சர்வதேச விலை குறையும் என எதிர்பார்க்கின்றனர்.

இவ்வாறு தெரிவித்துள்ளது.

மேற்காசிய போரால், வர்த்தக சிலிண்டர் வினியோகத்தில் ஏற்பட்ட பாதிப்பால், ஹோட்டல், சிற்றுண்டி கடைகளில் எண்ணெய் பலகாரங்கள் செய்வது குறைந்தது மற்றும் அதிகரித்த சர்வதேச விலை, ரூபாய் மதிப்பு சரிவு ஆகியவையும் உள்நாட்டு தேவைக்கேற்ப சமையல் எண்ணெய் கிடைத்ததும் இந்த சரிவுக்கு காரணம்.

 இந்தோனேஷியா, மலே � யாவில் இருந்து பாமாயில் இறக்குமதி

 அர்ஜென்டினா, பிரேசில், ரஷ்யா, உக்ரைனிலிருந்து சோயா, சூரியகாந்தி எண்ணெய் இறக்குமதி

Advertisement