சாலையின் குறுக்கே வேருடன் சாய்ந்த ராட்சத நாவல் மரம்

ஏற்காடு, ஏற்காடு அரசு மருத்துவமனை மற்றும் தாலுகா ஆபீஸ் செல்லும் முக்கிய சாலையில் இருந்த ராட்சத நாவல் மரம், நேற்று அதிகாலை 4:00 மணிக்கு வேரோடு சாய்ந்து விழுந்தது.

அதிகாலை நேரம் என்பதால், சாலையில் வாகன நடமாட்டம் குறைவாக இருந்ததால் அசம்பாவிதம் எதுவும் நடக்காமல் தவிர்க்கப்பட்டது. ஆனால், வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. மரம் விழுந்ததில் மின் கம்பிகள் அறுந்து விழுந்தன. இதனால் அப்பகுதி முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. காலை 8:00 மணிக்கு வேலைக்கு சென்ற பொதுமக்கள், மின் வாரியம், தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து, தீயணைப்பு வீரர்கள் மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர். பின்னர் சாலையில் ஏற்பட்ட போக்குவரத்து சரி செய்யப்பட்டது. மின் கம்பிகளை ஊழியர்கள் சரி செய்தனர்.

Advertisement