கெங்கவல்லி தொகுதி அ.தி.மு.க., கோட்டையாக தொடர்ந்து இருக்கும்: வேட்பாளர் பிரச்சாரம்
தலைவாசல், கெங்கவல்லி தொகுதி, அ.தி.மு.க., வேட்பாளர் நல்லதம்பி, நேற்று தலைவாசல், சார்வாய்புதுார், ஒதியத்துார், நடுவலுார், கெங்கவல்லி உள்ளிட்ட பகுதிகளில், வீதி, வீதியாகச் சென்று, தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது, அவர் பேசியதாவது:நான், ஊராட்சி தலைவராக இருந்தபோது, 2021ல், இ.பி.எஸ்., எனக்கு வாய்ப்பு கொடுத்ததால், எம்.எல்.ஏ.,வாக வெற்றி பெற்றேன். பணம் சம்பாதிக்க, இந்த பதவிக்கு வரவில்லை; மக்கள் சேவை பணிக்காக தொடர்ந்து பாடுபடுகிறேன். இன்றளவும் நான், அரசு பஸ்சில் பயணம் செய்து வருகிறேன். மீண்டும் இத்தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைத்துள்ளது. எப்போதும், என் நிலை மாறாமல் மக்களின் தொண்டனாக இருந்து, தொகுதி வளர்ச்சி பணிகளை மேற்கொள்வேன்.
அ.தி.மு.க., ஆட்சியில் தான், தலைவாசல் தாலுகா, 1,200 கோடி ரூபாயில் கால்நடை பூங்கா, பொன்னாளியம்மன் ஏரி போன்ற பயனுள்ள திட்டங்கள் கொண்டு வரப்பட்டது. தலைவாசல், மும்முடியில் 2 கோடி ரூபாய் மதிப்பில் உயர்மட்ட நடைபாதை இரும்பு மேம்பாலம்; புதிய தாலுகா அலுவலகம், ஆறகளூர் காமநாதீஸ்வரர் கோவில் நுழைவு மண்டபம், பல்வேறு ஊர்களில் நிழற்கூடம், சாலை வசதிகள் செய்து கொடுத்துள்ளேன்.
கடந்த, 2011 முதல், தற்போது வரை, அ.தி.மு.க.,வின் கோட்டையாக தான், கெங்கவல்லி தொகுதி உள்ளது. எத்தனை கூட்டணி கட்சிகளுடன் தி.மு.க., வந்தாலும், அ.தி.மு.க., தான் வெற்றி பெறும். கடந்த, 2021ல், இத்தொகுதியில் போட்டியிட்ட தி.மு.க., வேட்பாளருக்கு, முதல்வர் ஸ்டாலின் சாலையில் நடந்து கூட ஓட்டு கேட்டு பார்த்தார். ஆனால், ஸ்டாலினையும், வேட்பாளரையும், மக்கள் நம்பவில்லை. இ.பி.எஸ்., முதல்வராக வந்ததும், பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படும். மத்திய அரசு நம்முடன் உள்ளதால், வளர்ச்சி திட்டங்கள் கிடைக்கும். இவ்வாறு அவர் பேசினார்.
இதில், அ.தி.மு.க., - அ.ம.மு.க., - பா.ஜ., - பா.ம.க., - த.மா.கா., உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் பங்கேற்றனர்.
மேலும்
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.1280 அதிகரிப்பு
-
வேலூரில் முதல்வர் ஸ்டாலின்; வீடு வீடாக சென்று ஓட்டு சேகரிப்பு
-
தமிழக சட்டசபை தேர்தல்; பாஜ தேர்தல் அறிக்கை இன்று வெளியீடு
-
டில்லியில் துணை ஜனாதிபதி சிபிஆர் இல்லத்தில் பிரதமர் மோடி தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம்
-
அனல் பறக்கும் அரசியல் கள நிலவரம் என்ன; இன்றைய தினமலர் தேர்தல் களம்!
-
சினிமாவில் நடிக்க சிதம்பரம் மகனுக்கு ஆசை