சமூக நீதியை பின்பற்றுவது தி.மு.க., தான் கெங்கவல்லி தி.மு.க., வேட்பாளர் பிரசாரம்
கெங்கவல்லி, கெங்கவல்லி தொகுதி, தி.மு.க., வேட்பாளர் சின்னதுரை, நேற்று கெங்கவல்லி, தெடாவூர், ஆணையாம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில், உதயசூரியன் சின்னத்திற்கு ஓட்டு சேகரித்தார்.
அப்போது, அவர் பேசியதாவது: சமூக நீதிக்கு எதிராக, பா.ஜ., கூட்டணி கட்சிகள் உள்ளன. மத்திய அரசு, தமிழகத்திற்கு நிதி வழங்குவது முதல், திட்டங்கள் செயல்படுத்துவதிலும் புறக்கணித்து வருகிறது. தமிழக மக்கள் என்ன உணவு சாப்பிடுவது, எந்த மொழி பேசுவது, எந்த மொழி படிக்க வேண்டும் என்பதை, டில்லியில் இருந்து, பா.ஜ., முடிவு செய்ய நினைக்கிறது.
அ.தி.மு.க.,வும், பா.ஜ.,வும், சமூக நீதிக்கு எதிராக செயல்பட்டு வருகிறது. வேற்றுமையில் ஒற்றுமை என்ற தமிழக கலாச்சாரத்திற்கு, ஆபத்து ஏற்பட்டுள்ளதை மக்கள் உணர்ந்துள்ளனர். இதனால் தான், 2024 லோக்சபா தேர்தலில், பா.ஜ., - அ.தி.மு.க.,வையும், படுதோல்வியடையச் செய்து, தி.மு.க., வெற்றி பெற்றது. அதே போன்று, 2026 சட்டசபை தேர்தலில், தி.மு.க.,வை அதிக இடங்களில் வெற்றி பெற மக்கள் முடிவு
செய்துள்ளனர்.
தமிழகத்தில், சமூக நீதியை பின்பற்றி வரும் கட்சியாகவும், ஆட்சியாகவும் தி.மு.க., தான் உள்ளது. தி.மு.க.,வின் வெற்றியை, பிரசாரத்திற்கு செல்லும் இடங்களில் உணர முடிகிறது. நான், வெற்றி பெற்ற பின், ஜாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டு, அனைவருக்கும் எம்.எல்.ஏ.,வாக செயல்படுவேன். 2006ல், நான், எம்.எல்.ஏ.,வாக இருந்தபோது, இத்தொகுதிக்கு தேவையான வளர்ச்சி திட்டங்கள், நலத்திட்டங்கள் செயல்படுத்த உதவியாக இருந்தேன். தி.மு.க.,வில் உள்ள கூட்டணி கட்சியினர், ஆர்வத்துடன் என்னுடன் தேர்தல் பணிகள் மேற்கொண்டு வருகின்றனர்' இவ்வாறு அவர் பேசினார்.
தி.மு.க., - காங்., - வி.சி., - தே.மு.தி.க., - கொ.ம.தே.க., உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.
மேலும்
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.1280 அதிகரிப்பு
-
வேலூரில் முதல்வர் ஸ்டாலின்; வீடு வீடாக சென்று ஓட்டு சேகரிப்பு
-
தமிழக சட்டசபை தேர்தல்; பாஜ தேர்தல் அறிக்கை இன்று வெளியீடு
-
டில்லியில் துணை ஜனாதிபதி சிபிஆர் இல்லத்தில் பிரதமர் மோடி தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம்
-
அனல் பறக்கும் அரசியல் கள நிலவரம் என்ன; இன்றைய தினமலர் தேர்தல் களம்!
-
சினிமாவில் நடிக்க சிதம்பரம் மகனுக்கு ஆசை