இலவச திட்ட அறிவிப்புகளுக்கு வணிகர் பேரமைப்பு எதிர்ப்பு
ஈரோடு: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா, ஈரோட்டில் அளித்த பேட்டி:
திருவாரூரில் வரும் மே 5ல், மாநில வணிகர் விழிப்புணர்வு எழுச்சி மாநாடு நடக்கிறது. ஈரான் போரினால் ஹோட்டல் வர்த்தகம் கடுமையாக பாதித்துள்ளது.
தேர்தல் கமிஷன் அதிகாரிகள், வாகனச்சோதனை என்ற பெயரில், வியாபாரிகள் கொண்டு செல்லும் பணம், பொருட்களை பறிப்பதை கண்டித்து, கடையடைப்பு நடத்தினோம். தமிழக தலைமை தேர்தல் அதிகாரியுடன் பேச்சு நடந்த பின், பறிமுதல் நடவடிக்கை குறைந்துள்ளது.
சட்டசபை தேர்தல் வாக்குறுதிகளாக, ஒவ்வொரு கட்சியும் இலவச அறிவிப் புகளை வெளியிடுகின்றன. அந்த இலவச திட்டங்களால், வணிகர்கள் மற்றும் மக்கள் மீது வரிச்சுமை அதிகரிக்கும். எனவே, இலவசமே வேண்டாம். அதற்கு மாற்றாக, தரமான சாலைகள், உள் கட்ட மைப்புகள், நீர்நிலைகளை துார்வாரும் பணிகளை செய்யலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும்
-
அனல் பறக்கும் அரசியல் கள நிலவரம் என்ன; இன்றைய தினமலர் தேர்தல் களம்!
-
சினிமாவில் நடிக்க சிதம்பரம் மகனுக்கு ஆசை
-
ஊழல் செய்தால் ரத்த வாந்தி; சுடுகாட்டில் சுயேச்சை பூஜை
-
'அவை குறிப்பிலிருந்து நீக்க முடியாது' ; சபாநாயகரை கலாய்த்த இளைஞர்கள்
-
மது குடிப்போர் சங்கத்திற்கு ராமதாஸ் சின்னம்
-
கருணாசுக்கு 'நோ' ; தி.மு.க.,வினர் அடம்