உளவுத்துறை ஐ.ஜி., மீது தேர்தல் கமிஷனில் பா.ஜ., புகார்
சென்னை : 'தமிழக உளவுத்துறை ஐ.ஜி., செந்தில்வேல், சென்னை மாநகராட்சி கமிஷனர் குமரகுருபரன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகத்தில், தமிழக பா.ஜ., வழக்கறிஞர் பிரிவு சார்பில், புகார் அளிக்கப்பட்டு உள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது: உளவுத்துறை ஐ.ஜி., செந்தில்வேல், தேர்தல் அறிவிப்புக்கு பின், உளவுத்துறை அமைப்பை பயன்படுத்தி, கருத்து கணிப்பு எனக் கூறி, ஆளும்கட்சிக்கு ஆதரவாக, ஊடகங்களில் தவறான தகவல்களை பரப்பி வருகிறார்.
தி.மு.க.,வினர், வாக்காளர்களுக்கு 8,000 ரூபாய் மதிப்புள்ள கூப்பன்களை வினியோகித்து, குறிப்பிட்ட கடையில் கொடுத்து, பணமாக்கி கொள்ளுமாறு கூறுகின்றனர்.
அதை, உளவுத்துறை அதிகாரி என்ற முறையில், தேர்தல் கமிஷன் கவனத்திற்கு கொண்டு வர, செந்தில்வேல் முயற்சிக்கவில்லை. இதேபோல் சிறப்பு பிரிவு எஸ்.பி., கார்த்திக், தன் பதவியை வைத்து, ஆளும் கட்சியினருக்கு, அரசியல் தகவல்களை தீவிரமாக பகிர்ந்து வருகிறார்.
சென்னை மாநகராட்சி கமிஷனரான குமரகுருபரன், மாநகராட்சி ஊழியர்கள் வாயிலாக, தி.மு.க., வழங்கும் இலவச பொருட்களை வினியோகிக்க, அனுமதித்து வருகிறார். இந்த மூன்று அதிகாரிகளும் பதவியில் நீடிப்பது, நியாயமான தேர்தலை சீர்குலைக்கும்.
தங்கள் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தும் இவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து, தேர்தல் பணியில் இருந்து, மூவரையும் விடுவிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும்
-
அனல் பறக்கும் அரசியல் கள நிலவரம் என்ன; இன்றைய தினமலர் தேர்தல் களம்!
-
சினிமாவில் நடிக்க சிதம்பரம் மகனுக்கு ஆசை
-
ஊழல் செய்தால் ரத்த வாந்தி; சுடுகாட்டில் சுயேச்சை பூஜை
-
'அவை குறிப்பிலிருந்து நீக்க முடியாது' ; சபாநாயகரை கலாய்த்த இளைஞர்கள்
-
மது குடிப்போர் சங்கத்திற்கு ராமதாஸ் சின்னம்
-
கருணாசுக்கு 'நோ' ; தி.மு.க.,வினர் அடம்