உதயநிதி முதல்வராக முடியாது: பீயூஷ் கோயல்
சென்னை : ''உதயநிதி முதல்வராக முடியாது. தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறும்,'' என, மத்திய அமைச்சர் பீயூஷ் கோயல் தெரிவித்தார்.
சென்னையில் நேற்று அவர் அளித்த பேட்டி: பிரதமர் நரேந்திர மோடி மனதளவில் தொண்டராகவே இருக்கிறார். மக்களின் இதயங்களை வெல்வது எப்படி, சமூகத்தின் பல்வேறு தரப்பினரை சென்றடைவது எப்படி, தமிழக மக்களுக்கு சேவை செய்வது எப்படி என்பது குறித்து, என்னைப் போன்ற பா.ஜ.,வின் லட்சோப லட்சம் தொண்டர்களுக்கு மோடி வழிகாட்டுகிறார். ஊழல் நிறைந்த தி.மு.க, அரசு, இந்த தேர்தலில் தோற்கடிக்கப்படும்.
உதயநிதி, தமிழக முதல்வராக முடியாது. அவர் தமிழுக்கு எதிரானவர்; மக்களுக்கு எதிரானவர், பெண்களுக்கு எதிரானவர். எனவே அவர், முதல்வராக முடியாது.
தமிழகத்தில் அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி தலைமையில், தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைந்ததும், மக்களுக்கு நல்ல நிர்வாகம் வழங்கப்படும்.
மத்திய அரசுடன் இணைந்து செயலாற்றி, மத்திய அரசின் திட்டங்கள் தமிழக மக்களுக்கு வழங்கப்படும்.
விவசாயிகள், மீனவர்கள், தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறுவர். காங்கிரஸ் - தி.மு.க., தோல்விக்கான கூட்டணி. தமிழகத்தில் தே.ஜ., கூட்டணி வெற்றி பெறும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும்
-
ரூ.9.5 கோடியில் செயற்கை ஓடுதள பாதை பணி :காரைக்கால் விளையாட்டு மைதானத்தில் 'ஜரூர்'
-
இளைஞர் மீது தாக்குதல் 4 பேர் மீது வழக்கு பதிவு
-
அந்திலி நரிக்குறவர் குடியிருப்பு பகுதியில் வேட்பாளர் பழனிசாமி ஓட்டு சேகரிப்பு
-
சூரமங்கலம் ஜெயதுர்கா பள்ளி ஆண்டு விழா
-
ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு 2ம் கட்ட பயிற்சி; கலெக்டர் ஆய்வு
-
சூரியசக்தியில் ஒளிரப் போகும் ராஜிவ் உள் விளையாட்டு அரங்கம்: அரசு நிதிச்சுமையை குறைக்க ஏற்பாடு