இளைஞர் மீது தாக்குதல் 4 பேர் மீது வழக்கு பதிவு
பாகூர்: முன்விரோதம் காரணமாக வாலிபரை தாக்கிய, நான்கு பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
கடலுார் மாவட்டம், நத்தப்பட்டு காந்தி சிலை தெருவை சேர்ந்தவர் சந்தோஷ், 23; தனியார் நிறுவன ஊழியர். இவர் கடந்த 10ம் தேதி தனது நண்பர்கள் விஷ்ணு, ராஜ்குமார் ஆகியோருடன், சோரியாங்குப்பத்தில் உள்ள தனியார் பாரில் மது வாங்கி கொண்டு குடிப்பதற்காக அங்கிருந்த கருமாதி கொட்டைக்கு சென்றனர்.
அப்போது, அங்கிருந்த சோரியாங்குப்பத்தைச் சேர்ந்த தியாகராஜன், சதாசிவம், விஜய், கார்த்திக் ஆகியோர் முன் விரோதம் காரணமாக, சந்தோைஷ வழி மறித்து தகராறு செய்து, தாக்கினர். படுகாயம் அடைந்த சந்தோஷ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அவரது புகாரின் பேரில், பாகூர் சிறப்பு நிலை உதவி சப் இன்ஸ்பெக்டர் சுபரமணியன் வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அடுக்குமாடி குடியிருப்பு மக்களுக்காக 'செல்பேசி' செயலி: பாலு வாக்குறுதி
-
கோவில் சாலையில் வழிந்தோடும் கழிவுநீர்: பக்தர்கள் அவதி
-
வரும் 1ல் 'மெட்ரோ' பயணியர் அட்டை சிங்கார சென்னை அட்டைக்கு மாற்றம்
-
வாக்குறுதிகளை தாமதமின்றி நிறைவேற்றுவேன்: ஐ.ஜே.கே.,வேட்பாளர் வெங்கடேசன் உறுதி
-
தொகுதி வளர்ச்சியை பார்த்து மக்கள் என்னை வெற்றி பெற செய்வார்கள்: காங்., வேட்பாளர் ஹசன் மவுலானா பிரசாரம்
-
தொகுதி வளர்ச்சிக்கு மீண்டும் என்னை வெற்றி பெற செய்யுங்கள்: செந்தமிழன்
Advertisement
Advertisement