தி.மு.க.,வினர் பெண்களை உருவ கேலி செய்கின்றனர்: பா.ஜ., தமிழிசை கொந்தளிப்பு
சென்னை: ''பெண்களை உருவ கேலி செய்வது, தி.மு.க., வினரால் தொடர்ந்து நடத்தப்படுகிறது,'' என, சென்னை - மயிலாப்பூர் தொகுதி பா.ஜ., வேட்பாளர் தமிழிசை தெரிவித்தார்.
அவர் நேற்று அளித்த பேட்டி: பிரதமர் மோடியின் பல திட்டங்கள், தமிழகத்தில், 'காப்பி' அடிக்கப்பட்டுள்ளன. உதயநிதி அர்த்தம் இல்லாமல், முக்கிய விஷயங்கள் எதுவும் இல்லாமல், எதையோ பேசிக் கொண்டிருக்கிறார்.
பெண்களை உருவ கேலி செய்வது, தி.மு.க.,வினரால் தொடர்ந்து நடத்தப் படுகிறது. தி.மு.க., வினர், 8,000 ரூபாய் 'டோக்கன்' மாதிரியை கொடுத்து ஓட்டு சேகரிக்கின்றனர்.
மத்திய அரசின் நல்ல திட்டங்களை, தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் முடக்குகிறார். வி.சி.க., தலைவர் திருமாவளவன் குழப்பத்தின் உச்சத்தில் உள்ளார்.
அவர், துணை முதல்வர் பதவி கேட்டு விடுவார் என்பதால், தி.மு.க., அழுத்தம் கொடுத்தது. அதனால், அவர் காட்டுமன்னார்கோவில் தொகுதியில் போட்டியிடவில்லை.
வேங்கைவயல் விவகாரத்துக்குக் கூட நியாயத்தை வலியுறுத்தி போராடாத நிலையில் தான், அவர் தி.மு.க., கூட்டணியில் உள்ளார்.
மொத்தத்தில், தி.மு.க.,வின் அடிமையாக இருந்து கொண்டிருக்கிறார். ஆனால் அவர், எதிர் கூட்டணியை பார்த்து அடிமை என்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும்
-
அனல் பறக்கும் அரசியல் கள நிலவரம் என்ன; இன்றைய தினமலர் தேர்தல் களம்!
-
சினிமாவில் நடிக்க சிதம்பரம் மகனுக்கு ஆசை
-
ஊழல் செய்தால் ரத்த வாந்தி; சுடுகாட்டில் சுயேச்சை பூஜை
-
'அவை குறிப்பிலிருந்து நீக்க முடியாது' ; சபாநாயகரை கலாய்த்த இளைஞர்கள்
-
மது குடிப்போர் சங்கத்திற்கு ராமதாஸ் சின்னம்
-
கருணாசுக்கு 'நோ' ; தி.மு.க.,வினர் அடம்