மருத்துவ கழிவுகள் ஏற்றி வந்த கேரள மாநில லாரி; சிறைபிடித்த கிராம மக்கள்
மதுரை: மதுரையில் கண்மாயில் மருத்துவ கழிவுகளை கொட்ட வந்த கேரள மாநில லாரியை கிராம மக்கள் சிறைபிடித்தனர்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள கருமாத்தூர் அருகே ஆட்கள் அதிகம் நடமாட்டமில்லாத கடுக்காஞ்சி கண்மாய்க்குள் இரவு நேரத்தில் கேரள மாநில மருத்துவ கழிவுகளை கொட்டி தீ வைத்து எரித்து விட்டு செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர். மருத்துவ கழிவுகளில் இருந்து தீயினால் வெளியேறும் புகையினால் அருகில் உள்ள நரசிங்கபுரம் கிராம மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
இதனால் கிராமத்து இளைஞர்கள் கண்மாய் பகுதியில் இரவு, பகலாக கண்காணிப்பு செய்தனர். நேற்று இரவு 2.00 மணியளவில் மருத்துவ கழிவுகளை கொட்டுவதற்காக வந்த லாரியை சிறை பிடித்தனர். செக்கானூரணி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் லாரி டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாசகர் கருத்து (1)
மேலும்
-
18 வாய்க்கால்கள் பராமரிப்பு பற்றி பிரசாரத்தில் பேசாத வேட்பாளர்கள் கம்பம் வட்டார விவசாயிகள் புலம்பல்
-
நீத்தார் நினைவு நாள்
-
தரமற்ற ரேஷன் அரிசி வினியோகம்; மலைவாழ் மக்கள் அதிர்ச்சி
-
பிரசார வாகனங்களில் காதை பிளக்கும் ஒலி
-
மரத்தின் மீது பைக் மோதி பரோட்டா மாஸ்டர் பலி
-
கள்ளக்குறிச்சி கோவில்களில் தமிழ் புத்தாண்டு சிறப்பு பூஜை
Advertisement
Advertisement