கள்ளக்குறிச்சி கோவில்களில் தமிழ் புத்தாண்டு சிறப்பு பூஜை
கள்ளக்குறிச்சி: தமிழ் புத்தாண்டையொட்டி, கள்ளக்குறிச்சி, சின்னசேலம் பகுதி கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தது.
கள்ளக்குறிச்சி தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத கோவிந்தராஜ பெருமாள் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்து சிறப்பு பூஜைகள் நேற்று நடந்தது. அதேபோல் கள்ளக்குறிச்சி சாமியார் மடம் செம்பொற்சோதிநாதர் கோவிலில் மூலவர் சுவாமிக்கு நவரத்தினம் கிரீடம் அணிவிக்கப்பட்டது.
கமலா நேரு தெரு சித்தி விநாயகர் காமாட்சி அம்மன், மந்தைவெளி முத்து மாரியம்மன், கங்கையம்மன், கன்னிகா பரமேஸ்வரி அம்மன், கற்பக விநாயகர் கோவில்களில் அதிகாலை சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. நீலமங்கலம், சோமண்டார்குடி, தண்டலை, முடியனுார், வரஞ்சரம், தென்கீரனுார், விருகாவூர், கூத்தக்குடி, பெருவங்கூர் சாலை சங்கரலிங்கம் மடம் ஆகிய பகுதிகளில் உள்ள கோவில்களில் தமிழ்புத்தாண்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.
சின்னசேலம்; சின்னசேலம் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மூலவர் மற்றும் உற்சவருக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. அதேபோல் விஜயபுரம் செல்வ முருகன் கோவிலில் வள்ளி தெய்வானை சமேத முருகனுக்கு சந்தன காப்பு அலங்காரமும், ஐயப்பன் சுவாமிக்கு 18 படி அலங்காரம், பெருமாள் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்து சிறப்பு வழிபாடு நடந்தது. விஜயபுரம் வேதவல்லி மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. இதேபோல், வரதராஜ பெருமாள் கோவிலில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத பெருமாள் உற்சவர் மற்றும் மூலவர் சுவாமிகளுக்கு தமிழ் புத்தாண்டு சிறப்பு வழிபாடுகளை கோவில் பட்டாச்சாரியார் ஜெயக்குமார் செய்தார்.
மேலும்
-
ரூ.60 லட்சம் நிலமோசடி : உறவினர்கள் இருவர் கைது
-
மக்களுடன் நிற்கும் ஒரே கட்சி அ.தி.மு.க., மட்டுமே: தி.நகர் சத்யா
-
தலையில் விழுந்த குடம்: நனைந்த தி.மு.க., நிர்வாகிகள்
-
வார்டு தோறும் மருத்துவ கிளினிக் இலவசமாக நடத்தப்படும்: தமிழிசை
-
குழந்தைகள் பாதுகாப்பாக விளையாடும் சூழலை ஏற்படுத்தி தருவேன்: கார்த்திக் மோகன் உறுதி
-
வாரத்தின் ஏழு நாட்களும் எம்.எல்.ஏ., ஆபீஸ் இயங்கும் :அ.தி.மு.க.,- கந்தன் உத்தரவாதம்