பிரசார வாகனங்களில் காதை பிளக்கும் ஒலி
ஆண்டிபட்டி:பிரசார வாகனங்களில் காதை பிளக்கும் ஒலியால் பலருக்கும் இடையூறு ஏற்படுகிறது.
ஆண்டிபட்டி தொகுதியில் அரசியல் கட்சிகள்,சுயேச்சை வேட்பாளர்களின் பிரசாரத்திற்காக ஆட்டோ, ஜீப் பயன்படுத்தப்படுகின்றன. ஆட்டோ ஜீப்களில் அமைக்கப்படும் மைக்செட் ஸ்பீக்கரில் காதை பிளக்கும் ஒலி ஏற்படுகிறது. பிரசாரத்திற்கு வரும் இந்த வாகனங்கள் தொடர்ந்து பாடல்களை ஒலிக்கச் செய்தும், கட்சியின் கொள்கைகள், பாடல்கள், தலைவர்களின் பேச்சுக்களை ஒலிக்கச் செய்தும் பிரசாரத்தில் ஈடுபடுகின்றனர். குடியிருப்புகள், போக்குவரத்துக்கு நெருக்கடியான இடங்கள், வணிக வளாகங்கள், பொதுமக்கள் கூடும் இடங்களில் வாகனங்களை நிறுத்தி பிரச்சாரம் செய்யும் போது பலருக்கும் சிரமம் ஏற்படுகிறது. அடுத்தடுத்து வாகனங்களில் பிரசாரத்திற்கு தொடர்ந்து வந்து தொந்தரவு செய்கின்றனர். பிரச்சார வாகனங்களில் ஒலியின் அளவை நிர்ணயிக்க போலீசார், தேர்தல் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.
மேலும்
-
எம்ஜிஆரிடம் மூன்று முறை தோற்றவர் கருணாநிதி: அண்ணாமலை
-
ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.10,000 :அ.தி.மு.க., வேட்பாளர் சோமசுந்தரம் பிரசாரம்
-
அக்கமாபுரம் குளத்தை துார்வார நடவடிக்கை எடுக்க கோரிக்கை
-
கிரிக்கெட்: ஆக்கூர் அணி வெற்றி
-
தி.மு.க., ஆட்சியில் 5 ஆண்டு சாதனைகள்: காஞ்சியில் வேட்பாளர் நித்யா சுகுமார் பிரசாரம்
-
உத்திரமேரூர் தி.மு.க., வேட்பாளருக்கு கிராமங்களில் உற்சாக வரவேற்பு