தரமற்ற ரேஷன் அரிசி வினியோகம்; மலைவாழ் மக்கள் அதிர்ச்சி
மூணாறு:இடமலைகுடி ஊராட்சியில் ரேஷன் அரிசி தட்டுப்பாடு ஏற்பட்ட நிலையில், தரம் குறைந்த அரிசி வினியோகிக்கப்பட்டதால் மலைவாழ் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
மூணாறு அருகே உள்ள இடமலைகுடி ஊராட்சியில் மலைவாழ் மக்கள் மட்டும் வசிக்கின்றனர். அங்கு கடந்த ஒரு மாதமாக ரேஷன் அரிசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ரேஷன் அரிசி கேட்டு மலைவாழ் மக்கள் இடையே எதிர்ப்புகள் வலுத்தன.
அதனையடுத்து ஊராட்சியில் சொசைட்டிகுடியில் உள்ள ரேஷன் கடைக்கு ஒன்றரை டன் அரிசி மூணாறில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டது. அந்த அரிசியில் பறைவை இறக்கை, தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களின் கவர் உள்பட பல்வேறு கழிவுகள் காணப்பட்டன. தவிர அரிசி தரமற்றதாகவும் இருந்தது. அதனால் அதிர்ச்சி அடைந்த பொது மக்கள் அரிசியை வாங்காமல் ஏமாற்றத்துடன் திரும்பினர். அதிகாரிகளின் அலட்சியத்தால் மலைவாழ் மக்கள் பட்டினி கிடக்கும் சூழல் நிலவுகிறது.
மேலும்
-
போதை இளைஞர்களை நல்வழிப்படுத்த வாய் திறக்காத விஜய்: பதறும் பெற்றோரின் பரிதவிக்கும் கேள்வி!!
-
தமிழகத்தில் இதுவரை ரூ.1262 கோடி பணம், பரிசுப்பொருட்கள் பறிமுதல்
-
ஓட்டுப்போட வந்த 3 பேர் பலி; ஓசூர் அருகே கோர விபத்து
-
திருவண்ணாமலையில் சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்; தேசிய மகளிர் ஆணையம் விசாரணை
-
தங்கம் விலை சவரனுக்கு 400 ரூபாய் குறைந்தது
-
பயங்கரவாதத்துக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: பிரதமர் மோடி