முத்துச்சாமிபுரம் கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாடு: மக்கள் அவதி
தேவிபட்டினம்: முத்துசாமிபுரம் கிராமத்தில் கடும் குடிநீர் தட்டுப்பாட்டால் அப்பகுதி மக்கள் குடம் ரூ.15க்கு விலைக்கு வாங்கி சிரமப்படுகின்றனர்.
தேவிபட்டினம் அருகே, பாண்டமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட முத்துசாமிபுரம் பகுதியில், 80க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். குடியிருப்பு பகுதிகளில் பைப் லைன் காட்சி பொருளாக மட்டுமே உள்ளன. காவிரி கூட்டு குடிநீர் வராததால் மக்கள் குடிநீருக்கு சிரமம் அடைந்து, டிராக்டர்களில் விற்பனை செய்யப்படும் பாதுகாப்பற்ற குடிநீரை குடம் ரூ.15 வரை கொடுத்து வாங்கி பயன்படுத்தும் நிலையில் உள்ளனர்.
குறைந்த மின்னழுத்த பிரச்னையால் கிராமத்தினர் பாதிப்படைந்துள்ளனர். கிராமத்திற்கு குடிநீர், குறைந்த மின்னழுத்த பிரச்னை குறித்தும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடமும், அரசியல் கட்சி பிரமுகர்களிடமும் எடுத்துரைத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
கடந்த லோக்சபா, சட்டசபை தேர்தலின் போது, வெற்றி பெற்றதும் குடிநீர் பிரச்னையை தீர்ப்பதாக கூறி ஓட்டு சேகரித்தனர். அத்தேர்தலில் தி.மு.க., கூட்டணி கட்சியினரே வெற்றி பெற்றனர். ஆனால், வெற்றி பெற்ற பின்பு இப்பகுதி குடிநீர் பிரச்னையை தீர்க்க மக்கள் பிரதிநிதிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த நிலையில், தற்போது தேர்தல் வருவதால், மீண்டும் ஓட்டு கேட்க மட்டும் கட்சியினர் வருகின்றனர் என அப்பகுதி மக்கள் ஆதங்கம் தெரிவித்தனர்.
மேலும்
-
காவல்துறை, வருமான வரித்துறை சோதனை; பறிமுதல் தொகை ரூ.1.52 கோடியாக உயர்வு
-
ஸ்ரீ வினோத் ஜூவல்லரியில் அட்சய திருதியை சிறப்பு விற்பனை
-
ஓட்டுச்சாவடி அலுவலர்கள் பயிற்சிக்கு மின்னணு இயந்திரங்கள் அனுப்பும் பணி
-
வாரம் ஒரு முறை மோடி வருகிறார் நிதி வரவில்லை: உதயநிதி கிண்டல்
-
பா.ஜ., நகர தலைவரை திட்டிய மகளிரணி தலைவி மீது வழக்கு
-
மேற்காசியா போர் : அதிபர் டிரம்ப் - பிரதமர் மோடி ஆலோசனை