மேற்காசியா போர் : அதிபர் டிரம்ப் - பிரதமர் மோடி ஆலோசனை

13


புதுடில்லி: மேற்காசியா விவகாரம் தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் பிரதமர் மோடி இருவரும் தொலைபேசியில் 40 நிமிடங்கள் ஆலோசனை நடத்தினர்.


மேற்காசிய நாடான ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து கடந்த பிப்., 28ம் தேதி முதல் போர் தொடுத்து வருகின்றன. உலக நாடுகளின் வலியுறுத்தத்தைத் தொடர்ந்து, தற்காலிகமாக, இரண்டு வார போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே, நம் அண்டை நாடான பாகிஸ்தானில் சமீபத்தில் பேச்சு நடந்தது. தொடர்ந்து, 21 மணி நேரம் நடந்த பேச்சு, எவ்வித உடன்பாடும் எட்டப்படாமல் தோல்வியில் முடிந்தது. இதைத் தொடர்ந்து ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல்கள் செல்வதற்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது.


இந்நிலையில், போர் நிறுத்த நடவடிக்கைக்கு பிறகு, இந்த விவகாரம் குறித்து அதிபர் டிரம்ப் பிரதமர் மோடி இருவரும் தொலைபேசியில் 40 நிமிடம் ஆலோசனை நடத்தினர். போர் நிறுத்தம் அமலுக்கு வந்த பிறகு இரு தலைவர்களும் ஆலோசனை நடத்துவது இதுவே முதல்முறையாகும். அப்போது இந்திய மக்கள் உங்களை விரும்புவதாக டிரம்ப்பிடம் மோடி தெரிவித்து உள்ளார்.


இது தொடர்பாக இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் செர்ஜியா கோர் கூறியதாவது:
சில நிமிடங்களுக்கு முன்பு இரு தலைவர்களும் தொலைபேசியில் பேசினர். தகவல்களை தொடர்ந்து பிரதமர் மோடியிடம் டிரம்ப் பரிமாறி வருகிறார். இருவரும் ஈரான் போர் மற்றும் வர்த்தகம் குறித்து விவாதித்தனர் எனத் தெரிவித்துள்ளார்.

Advertisement