ஸ்ரீ வினோத் ஜூவல்லரியில் அட்சய திருதியை சிறப்பு விற்பனை
விழுப்புரம்: விழுப்புரம் காமராஜர் வீதியில் அமராபதி விநாயகர் கோவில் அருகே உள்ள ஸ்ரீ வினோத் ஜூவல்லரியில் அட்சய திருதியை முன்னிட்டு நகைகள் சிறப்பு விற்பனை நடக்கிறது.
இது குறித்து கடை உரிமையாளர்கள் பாபுலால், வினோத்குமார், ரஞ்சித்குமார் ஆகியோர் கூறுகையில், 'கடந்த 40 ஆண்டுகளாக வாடிக்கையாளர்கள் நன்மதிப்போடு செயல்பட்டு வரும் ஸ்ரீ வினோத் ஜூவல்லரியில் அட்சய திருதியை முன்னிட்டு தங்க நகைகள் வாங்க வருபவர்களுக்கு கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் முன்பதிவு நடக்கிறது.
எங்கள் கடையில் வாங்கும் 916 ஹால்மார்க் தங்க நகைகளுக்கு ஒரு சவரனுக்கு 4,000 ரூபாய் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
அதே போல், வெள்ளி பொருட்கள் ஒரு கிலோவிற்கு 8,000 ரூபாய் தள்ளுபடி செய்யப்படுகிறது. பொதுமக்கள் வாங்கும் அனைத்து 916 ஹால்மார்க் தங்க நகைகள் மற்றும் வெள்ளி கொலுசு, பாத்திரங்களுக்கு செய்கூலி இல்லை.
அதிரடியாக யாரும் தர முடியாத அளவில் மிக, மிக குறைந்த சேதாரத்தில் வழங்குகிறோம். புதுப்புது டிசைன்களில் நகை, வெள்ளி பொருட்கள் குவிந்த வண்ணம் உள்ளது. மேலும் லட்சுமி குபேர சிறுசேமிப்பு திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம்' என்றனர்.