ஓட்டுச்சாவடி அலுவலர்கள் பயிற்சிக்கு மின்னணு இயந்திரங்கள் அனுப்பும் பணி

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில், 7 தொகுதிகளின் தேர்தல் ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு, பயிற்சியளிப்பதற்காக, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி நடந்தது.

விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள தேர்தல் ஆணையத்தின் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களுக்கான குடோனில் இருந்து, தேர்தலுக்காக, முதல் கட்டமாக 7 தொகுதிகளில் உள்ள ஓட்டுச்சாவடி தலைமை அலுவலர்கள் மற்றும் ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சிக்காக இயந்திரங்கள் எடுக்கப்பட்டது.

ஏற்கனவே முதல் கட்ட தேர்தல் பயிற்சி வகுப்பிற்காக, கடந்த ஜனவரி 1ம் தேதி 5 சதவீத மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் எடுக்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக, நேற்று இரண்டாம் கட்டமாக பயிற்சியளிப்பதற்கு 5 சதவீத ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் குடோனிலிருந்து எடுக்கப்பட்டு தொகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதற்காக மாவட்ட தேர்தல் அதிகாரி ஷேக்அப்துல் ரஹ்மான் தலமையில், அரசியல் கட்சி பிரதிநிதிகளின் முன்னிலையில் குடோன் திறக்கப்பட்டு எடுக்கப்பட்டது.

டி.ஆர்.ஓ., அரிதாஸ், தேர்தல் பிரிவு அலுவலர்கள் ஜான்சிராணி, கணேஷ் உடனிருந்தனர்.

Advertisement