முத்துக்கொண்டாபுரத்தில் குடிநீர் தட்டுப்பாடுக்கு  தீர்வு காண கோரிக்கை

திருவாலங்காடு: முத்துக்கொண்டாபுரத்தில் நிலவும் குடிநீர் தட்டுப்பாடு காரணமாக, அப்பகுதி மக்கள் தவித்து வருகின்றனர்.

திருவாலங்காடு ஒன்றியத்திற்கு உட்பட்டது முத்துக்கொண்டாபுரம் கிராமம். இப்பகுதியில் ஆழ்துளை கிணறு அமைத்து, மூன்று மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மூலம் கிராம மக்களுக்கு குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது.

கோடையில் குடிநீர் தட்டுப்பாடு மற்றும் தரமற்ற குடிநீர் கிடைப்பதால், அப்பகுதி மக்கள் குடிநீரை பயன்படுத்துவதில்லை. இதனால், கனகம்மாசத்திரம் ---- தக்கோலம் நெடுஞ்சாலையில், முத்துக்கொண்டாபுரத்தில் உள்ள ஆழ்துளை கிணறில் குடிநீரை பிடித்து செல்கின்றனர்.

அதேபோல, கனகம்மாசத்திரம், காரணிநிஜாம்பட்டு கிராமங்களைச் சேர்ந்தவர்களும், இந்த ஆழ்துளை கிணறில் இருந்து தண்ணீரை பிடித்து செல்கின்றனர்.

எனவே, கோடை காலத்தில் ஏற்படும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கவும், நிரந்தர தீர்வு காண வேண்டும் எனவும், அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Advertisement