தேசிய அளவிலான வில்வித்தை போட்டி முதலிடம் பிடித்த பொன்னேரி மாணவி
பொன்னேரி: வில்வித்தை போட்டியில் தேசிய அளவில் முதலிடம் பிடித்த மாணவியை பெற்றோர், பயிற்சியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.
தேசிய வில்வித்தை சம்மேளனம் சார்பில், 18 வயதிற்கு உட்பட்டோருக்கான, 'நேஷனல் ரேங்கிங் ஆர்சரி டோர்னமென்ட்' போட்டிகள், ஜெய்ப்பூர், குஜராத், எர்ணாகுளம், ஹிமாச்சல் ஆகிய பகுதிகளில், ஐந்து மாதங்களாக நடைபெற்றன. புள்ளிகள் அடிப்படையில் முதல் எட்டு இடங்களை பிடித்த வீரர்கள் இறுதி போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
அதில், தமிழக அணி சார்பில், திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த ஆண்டார்குப்பம் பகுதியைச் சேர்ந்த முகப்பேர் வேலம்மாள் பள்ளியில், ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவியும், வில்வித்தை வீராங்கனையுமான வெனிசாஸ்ரீ, 13, அதிக புள்ளிகளுடன் தேர்வானார்.
நேற்று முன்தினம் புதுடில்லியில் இதற்கான இறுதி போட்டிகள் நடந்தன. மஹாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த வீராங்கனையுடன், வெனிசாஸ்ரீ மோதினார். அவரை விட நான்கு புள்ளிகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். இதன் மூலம், தேசிய அளவிலான போட்டியில் முதலிடத்தை பிடித்து சாதனை படைத்தார்.
சாதனை படைத்த வெனிசாஸ்ரீக்கு, இந்திய வில்வித்தை சம்மேளனத்தின் தலைவரும், மத்திய அமைச்சருமான அர்ஜுன் முண்டா, சிக்கிம் மாநில அமைச்சர் சோனம் லாமா, என்.டி.பி.சி., நிறுவனத்தின் பொது மேலாளர் ஜெயநாராயணன், இந்திய வில்வித்தை சம்மேளன பொது செயலர் வீரேந்தர் சச்தேவா ஆகியோர் சான்று வழங்கினர். மேலும் வெனிசாஸ்ரீயை, பெற்றோர், ஆசிரியர்கள், பயிற்சியாளர்கள் லவ்லிசுந்தர், இசக்கியேல் பாராட்டினர்.
மேலும்
-
போதை இளைஞர்களை நல்வழிப்படுத்த வாய் திறக்காத விஜய்: பதறும் பெற்றோரின் பரிதவிக்கும் கேள்வி!!
-
தமிழகத்தில் இதுவரை ரூ.1262 கோடி பணம், பரிசுப்பொருட்கள் பறிமுதல்
-
ஓட்டுப்போட வந்த 3 பேர் பலி; ஓசூர் அருகே கோர விபத்து
-
திருவண்ணாமலையில் சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்; தேசிய மகளிர் ஆணையம் விசாரணை
-
தங்கம் விலை சவரனுக்கு 400 ரூபாய் குறைந்தது
-
பயங்கரவாதத்துக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: பிரதமர் மோடி