கரும்பு சாறு பிழிந்து முதல்வர் ஸ்டாலின் பிரசாரம்; அண்ணாமலை- வானதி பைக் பேரணி

12


சென்னை: சென்னை சைதாப்பேட்டையில் முதல்வர் ஸ்டாலின் கரும்பு சாறு பிழிந்து தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். கோவையில் வானதி சீனிவாசன் உடன் அண்ணாமலை இணைந்து இருசக்கர பேரணி பிரசாரம் செய்தார்.

சென்னையை அடுத்த சோழிங்கநல்லூர் தொகுதியில் நடந்து சென்று, பொதுமக்களை சந்தித்து திமுக வேட்பாளருக்கு ஆதரவாக முதல்வர் ஸ்டாலின் ஓட்டு சேகரித்தார். சாலையில் நடந்து சென்ற மக்களிடம் கை குலுக்கியும், புகைப்படம் எடுத்தும் முதல்வர் ஸ்டாலின் மகிழ்ந்தார்.


Tamil News
Tamil News
Tamil News

தொடர்ந்து வேளச்சேரி காந்தி சாலையில் நடந்து சென்று காங்கிரஸ் வேட்பாளர் அசன் மளலானாவுக்கு ஆதரவாக முதல்வர் ஸ்டாலின் ஓட்டு சேகரித்தார். சைதாப்பேட்டையில் அமைச்சர் மா.சுப்பிரமணியனை ஆதரித்து ஆட்டோவில் சென்று முதல்வர் ஓட்டு சேகரித்தார். சைதாப்பேட்டையில் ஒரு கடையில் முதல்வர் ஸ்டாலின் கரும்பு சாறு பிழிந்து பிரசாரம் செய்தார்.

கோவையில்.…





@block_Y@

பைக் பேரணி

அதேபோல், கோவையில் வானதி சீனிவாசன் உடன் அண்ணாமலை இணைந்து இருசக்கர பேரணி பிரசாரம் செய்தார். வானதி சீனிவாசனை அமர வைத்து இருசக்கர வாகனத்தை அண்ணாமலை ஓட்டிச்சென்றார். பாஜ நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.block_Y


@block_G@

அன்பு தம்பிக்கு நன்றி

நிருபர்களிடம் வானதி சீனிவாசன் கூறுகையில், ''அன்பு தம்பி அண்ணாமலைக்கு நன்றி. யார் வளர்ச்சிக்காக வேலை செய்வார்கள், மக்களுக்காக உழைப்பார்கள் என்று கோவை மக்களுக்கு தெளிவாக தெரியும், என்றார்.block_G

Advertisement