தி.மு.க., ஆட்சி அடித்து விரட்டப்பட வேண்டிய தீய ஆட்சி: எச்.ராஜா
திருப்புத்துார்: ''தி.மு.க., ஆட்சி அடித்து விரப்பட்ட வேண்டிய தீய ஆட்சி,'' என, திருப்புத்துாரில் பா.ஜ., தேசிய முன்னாள் செயலர் எச்.ராஜா சாடினார்.
கூட்டணி கட்சி வேட்பாளரை ஆதரித்து நடந்த தேர்தல் பிரசாரத்தில் எச்.ராஜா பேசியதாவது: பா.ஜ., அ.தி.மு.க., அ.ம.மு.க., பா.ம.க., உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் நாட்டு நலனுக்காக ஒன்று சேர்ந்தவை. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து ஏற்கனவே தி.மு.க., தலைவர் ஸ்டாலின் பேசுகையில்,''10 ரூபாய் பாலாஜி, இவரை போல கேவலமாக யார் உள்ளார்கள்,'' என்றார்.
தற்போது அமைச்சரவையில் அவர் அமைச்சராக இருந்தார். அதே மாதிரி சட்டசபையில் காளிமுத்து சபாநாயகராக இருந்த போது அமைச்சர் சேகர்பாபு தன் இருப்பை காட்ட முன்னாள் முதல்வர் கருணாநிதி குடும்பத்தை கெட்ட வார்த்தையால் பேசினார். நாம் அப்படி பேச மாட்டோம். கருணாநிதி குடும்பத்தை கேவலமாக பேசியவர். அவர் இன்று தி.மு.க.,அமைச்சரவையில் உள்ளார். இப்படி தி.மு.க.,வில் உள்ள ஒவ்வொருவரும் அவ்வளவு மோசமானவர்கள்.
வாக்காளர்களிடம் 'பணம் கொடுத்தால் வாங்குங்கள்' என்கிறார்கள் சிலர். அது தவறு. தேர்தலில் காசுக்கு ஓட்டை விற்காமல், நாளை வாக்காளர்கள் நேர்மையை நிரூபிக்க வேண்டும். கூட்டணிக்கட்சிக்கு பா.ஜ., சொன்னால் சொன்னது தான்.
நமக்கு 88 சீட் இருந்தாலும் 44 சீட் கூட இல்லாத கட்சிக்கு முதல்வர் பதவி கொடுத்தது. நட்புக்கு முழு இடம் கொடுத்து தென்னிந்திய பார்வர்ட் பிளாக் தலைவர் திருமாறனை பா.ஜ., வேட்பாளராகவே நிறுத்தியுள்ளோம். இவ்வாறு அவர் பேசினார்.
அடிச்சு விரட்டிட்டீங்கன்னா அவங்க என்ன செய்ய போறாங்க பொழுது போக்குக்கு. ரவுடி தொழிலுக்கு திருப்பியும் போய் தான் ஆகணும்நிக்கிற நிலைமை அவங்க நிலைமை.
பணம் பதவி அதிகாரம் ருசி கண்ட பூனைகள் .இனி வேலைக்கு ஆகாது
திருந்தாத ஜென்மம் , தெய்வம் சிட்ஸை கொடுத்தாலும் புரிந்துக்காகவே முடியவில்லை.
இவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது என்று கேள்விப்பட்டேன். உடலுடன் சேர்ந்து மனநிலையும் பாதிக்கப்பட்டு விட்டது போல் உள்ளது!
முக ஸ்டாலின் ஆஸ்பத்திரியில் படுத்து கொண்டு மோடி அவர்களை வரவேற்க போகாமல் டிமிக்கி குடுத்தாரே அது மாதிரியா? அப்பறம் என்ன கேள்விப்பட்டாய்? பேப்பர்ல வந்த நியூஸ் தானே. கொலம்பஸ் மாதிரி கமெண்ட் போட்டிருக்கே. ரொம்ப வெய்யிலில் சுத்துரியா?
மக்கள் இலவசங்களை நம்பி இருக்கும் வரை மாநிலத்தை திருத்த முடியாது. சட்டம் ஒழுங்கு மற்றும் பெண்களுக்கு, கல்லூரி செல்லும் பெண்களின் பாதுகாப்பு என்பது மிக பெரிய கேள்வி குறியாக மாறி உள்ளது. போதை, கஞ்சா மற்றும் டாஸ்மாக், பெண்கள் இன்னும் 5 வருடங்களில் வெளியில் வர முடியாத நிலைமையை உண்டாக்கும். என்ன தான் வெள்ளை அடித்தாலும் அதையும் மீறி இந்த பிரச்சனைகள் பூதாகரமாக தினமும் வெளியில் வருகிறது.
இது கிராமங்களில், சிறு நகரங்களில் மிக மோசமான நிலைமையை இன்னும் 5 வருடங்களில் உண்டாக்கும் என்பதை மறுக்க முடியாது.
உங்க எண்ணமும் நீங்க சார்ந்த அக்கட்சி எண்ணமும் அப்படி. கீழ் தட்டு மக்களும் இந்துக்களுக்கு எதிராகா செயல் பட்டாலும் அடிமை மக்கள் அவர்கள் அவர்கள் மேல் தானெ நம்பிக்கையை வைத்துள்ளார்கள். சிலர் எவென் ஆண்டாள் நமெக்கென்ன என்று வேறு இருக்கிறார்கள். 5 மாதம் முன்பேயே தி மு க்கா MLA குடந்தையை அடுத்து உள்ள கிராமம் முழுக்க கொடுத்தாகி விட்டது கட்சியில் இடம் கிடைய்யது விடும் நபிக்கையுடன் முழு வீச்சில் எவர் சில்வர் மூடி போட்ட ட்ரம் அதற்குள் சீலை வைத்து வீடு வீடாக கொடுத்தாகி விட்டது. இப்போ பெண்கள் ஒட்டு நிச்சயமாகி விட்டது.
வாய் சரியாப்போச்சா?? மீண்டும் வந்து வன்மத்தை கக்குகிறார்???
ராஜா உடல் நிலை சரில்லாமல் இருந்த போது பிஜேபி காரர்கள் மற்றும் டெல்லி இல் இருந்து வந்த பெரிய தலைவர்கள் யாரும் கண்டு கொள்ளவில்லை பார்க்கவில்லை . ஆனால் அப்போது ராஜாவால் தினமும் திட்டு வாங்கும் ஸ்டாலின் தான் நேரில் சென்று பார்த்து நலம் விசாரித்தார் . அதை மறந்து விட்டார் போல தெரிகிறது
இவர் எந்த ரகம் என தெரிய வில்லை
இந்த எச் ராஜா தமிழர்களுக்கு விரோதமானவர் ,இவரை தமிழர்கள் விரட்டி அடிக்க வேண்டும்
சமாவதுவுத்துக்கு எதிரான தீய சக்தி சாங்கி பிஜேபி தான் ராஜா. உங்களுக்கு இன்னும் வாய்ப்பேச்சு குறையிலியேமேலும்
-
'பாராளுமன்றத்தில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை முன் மொழிந்தவன் நான்'
-
விவசாயி உள்பட இருவர் மாயம்
-
சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவையொட்டி கடைகள் அடைப்பு; சாலைகள் 'வெறிச்'
-
தளியில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா இ.கம்யூ., - த.வெ.க.,வினர் 6 பேர் கைது
-
விவசாயி மீது தாக்குதல்
-
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 84.99 சதவீதம் ஓட்-டுப்பதிவு