யார் உங்கள் வேட்பாளர்?

1

இதோ அதோ என எதிர்பார்த்து கொண்டிருந்த தமிழக சட்டசபை தேர்தல் - 2026 வந்து விட்டது. நாளை காலை 7:00 மணியில் இருந்து விறுவிறுப்பான ஓட்டுப்பதிவு தொடங்கி விடும்.

கடந்த சட்டசபை தேர்தலில் இருந்து, இந்த தேர்தல் முற்றிலும் மாறுபட்டது. வழக்கமாக, தலைநகர் சென்னையில் 60 சதவீத ஓட்டுப்பதிவை தொட்டாலே அதிகம் என்ற நிலை இருந்தது. காரணம், ஓட்டு போடவே தகுதியற்ற பலரும் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்று இருந்ததால், குறைவான ஓட்டுப்பதிவு சதவீதத்தையே தலைநகர் சந்தித்துக் கொண்டிருந்தது.

ஆனால், சமீபத்தில் நடந்த வாக்காளர் தீவிர திருத்தத்தில் குறைகள் அத்தனையும் நீக்கப்பட்டு, சரியான வாக்காளர் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளதால், இம்முறை கடுமையான வெயிலையும் கடந்து, கூடுதல் ஓட்டுப்பதிவு சதவீதம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஓட்டுப்பதிவு குறைந்தபட்சம் 80 சதவீதத்தை கடக்கும் என, மிகுந்த நம்பிக்கையோடு இருக்கிறது தேர்தல் கமிஷன். அதோடு, தேர்தலை அச்சமின்றி எதிர்கொள்ள தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் கமிஷன், மிக நேர்த்தியாக செய்திருக்கிறது.

வாக்காளர்களாக இருப்போர், அதிக துாரம் சென்று ஓட்டு போட தேவையில்லை என்ற நிலையை ஏற்படுத்தி, வீட்டுக்கு அருகிலேயே ஓட்டு போட ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அதனால், வாக்காளர்கள் தங்களுடைய ஜனநாயகக் கடமையை ஆற்ற எவ்வித சிரமமும் படவேண்டியதில்லை.

இந்த நேரத்தில், ஒவ்வொரு வாக்காளரும் தங்களுடைய மனதில் தெளிவான ஒரு விஷயத்தை இருத்திக் கொண்டு ஓட்டுச்சாவடிக்கு செல்ல வேண்டும் என்பதே, ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ள ஒவ்வொரு வாக்காளரின் எதிர்பார்ப்பும்.

விலைமதிப்பற்ற ஓட்டை கையில் வைத்திருக்கும் ஒவ்வொரு வாக்காளரும், ஓட்டுச்சாவடிக்கு சென்றோம், பிடித்தவருக்கு ஓட்டு போட்டோம் என்று, யாரோ ஒருவருக்கு ஓட்டு போடுவது என்பது, ஜனநாயகத்துக்கு மிகப்பெரிய ஆபத்தை விளைவிக்கும்.

ஐந்தாண்டு காலத்துக்கு நம் பிரதிநிதியாக இருந்து செயல்பட வேண்டிய, தகுதிவாய்ந்த நபரை தேர்வு செய்யப் போகிறோம் என்ற பொறுப்புணர்வோடு, ஓட்டு போட்டால் மட்டுமே, மிகச்சிறந்த மக்கள் பணியாளர்கள் கிடைப்பர்.

அதற்காக, உங்கள் தொகுதியில் போட்டியிடும் பிரதான நான்கு கட்சிகளின் வேட்பாளர்கள் மற்றும் அவர்கள் குறித்த விவரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

இனி, தேர்வு உங்கள் கையில்...

Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News

Advertisement