இந்தியாவுக்கு எதிரான செயல்களுக்கு பதிலடி நிச்சயம்; பஹல்காம் தாக்குதல் நினைவு நாளில் ராணுவம் எச்சரிக்கை
நமது நிருபர்
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் நினைவு நாளில், இந்தியாவுக்கு எதிரான செயல்களுக்கு பதிலடி நிச்சயம் என இந்திய ராணுவம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.
கடந்த ஆண்டு ஏப்ரல் 22ம் தேதி, பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணியர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இவர்களில், கர்நாடகாவை சேர்ந்த எம்.பி.ஏ., பட்டதாரியான பரத் பூஷன், ஷிவமொக்காவைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழில் அதிபர் ராவ், 47, ஆகிய இருவரும் அடங்குவர்.
இவர்கள் இருவரும் தங்கள் மனைவி, மகன் கண் முன்னே பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களின் குடும்பத்தினரைப் பொறுத்தவரை, அந்தத் தாக்குதல் குறித்த வே தனை நிறைந்த நினைவுகள் இன்றும் அவர்களை விட்டு அகலாமல் தொடர்கின்றன.
தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு இந்திய ராணுவம் ஆப்பரேஷன் சிந்தூர் என்ற ராணுவ நடவடிக்கை மூலம் தக்க பாடம் புகட்டியது. தற்போது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதை அடுத்து, சுற்றுலா பயணியரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்த துயர சம்பவம் நிகழ்ந்து இன்றுடன் ஓராண்டு நிறைவு பெற்றது. பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் நினைவு நாளில், இந்தியாவுக்கு எதிரான செயல்களுக்கு பதிலடி நிச்சயம் என இந்திய ராணுவம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.
இந்திய ராணுவம் சமூக வலைதளத்தில், ''நாட்டிற்கு எதிரான எந்தவொரு தீய செயலுக்கும் பதிலடி கொடுக்கப்படும். எதிரான செயல்களுக்குப் பதிலடி உறுதி. எப்போதும், நீதி நிலைநாட்டப்படும் '' என தெரிவித்துள்ளது.
மேலும், 'ஆப்பரேஷன் மகாதேவ்' நடவடிக்கையைக் காட்டும் ஒரு புகைப்படத்தையும், தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளைத் தீவிரமாகத் தேடிப்பிடித்து அவர்களை ஒழித்ததையும் ராணுவம் தெளிவுப்படுத்தியது. ஆப்பரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கை தொடர்கிறது என்றும் ராணுவம் வெளியிட்ட படத்தில் இடம்பெற்றுள்ளது.
வாசகர் கருத்து (9)
திராவிட மாறன் - ,
22 ஏப்,2026 - 16:23 Report Abuse
எனக்கு பாஜகவைப் பிடிக்காது, உண்மையில் நான் ஒரு திமுக ஆதரவாளர். இருப்பினும், தேசியப் பாதுகாப்பு என்று வரும்போது, தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் எந்த அரசாங்கத்திற்கும் எனது முழு ஆதரவையும் அளிப்பேன், இந்திய ராணுவம் வாழ்க 0
0
Reply
Thiru, Coimbatore - Coimbatore,இந்தியா
22 ஏப்,2026 - 12:38 Report Abuse
இந்தியர்களாகிய நாம் அனைவரும் முதலில் தம்தம் மனதில் தேசமா மதமா எது முதலில் என முடிவு செய்து கொள்வோம்...
தேசமே என முடிவெடுத்து விட்டால் பிறகு நம்மை எவனும் தொட்டு பார்க்க பயம் வரும்...
நம் தேசமே கோயில்...
நம் ராணுவ வீரர்களே கடவுள்...
ஆபரேஷன் சிந்தூர் தொடர்கிறது...
ஜெய் ஜவான். ஜெய் கிஷான்.
ஜெய்ஹிந்த்... 0
0
Reply
Rathna - Connecticut,இந்தியா
22 ஏப்,2026 - 12:23 Report Abuse
காஷ்மீர் பஹல்கமில் நடந்த படுகொலைக்கு பின்னால் ஹமாஸ் தீவிரவாத இயக்கம் உள்ளது. ஹமாஸ் தான் ஒரு சமூக மத அடையாளங்களை கண்டறிந்து அப்பாவி மக்களை கொல்லும் வழிமுறையை கொண்டு வந்தது. இதே ஹமாஸ் இயக்கம் தான் பஹல்கம் கொலைகளுக்கு முன்னால் POK வில் பாகிஸ்தானிய தீவிரவாதிகளுடன் கூட்டம் போட்டு இந்த திட்டத்தை வகுத்து கொடுத்தது. அதற்கு பின்னால் ஹமாஸும், பாகிஸ்தானும், பங்களாதேஷும் 4 தீவிரவாத கூட்டங்களை நடத்தி உள்ளது.
2014 க்கு முன்னால் காங்கிரஸ் ஆட்சியில் இந்திய முழுவதும் நடந்த தீவிரவாத தாக்குதல்களை, தமிழ்நாட்டில் நடந்த தாக்குதல்களை நாம் நினைவு கூற வேண்டும். போலி திராவிடம் என்பது தீவிரவாத கூட்டங்களுக்கு அடைக்கலம் மற்றும் பாதுகாப்பு அளிக்கும் திட்டமாக மாறிவிடக்கூடாது. இதை மக்கள் உணரா விட்டால் தீவிரவாதம் உங்கள் வீட்டை தட்டும் நேரம் வெகு விரைவில் இல்லை. 0
0
Reply
தர்மராஜ் தங்கரத்தினம் - TAMILANADU,இந்தியா
22 ஏப்,2026 - 10:09 Report Abuse
முதலில் உள்ளூர் தேசவிரோதிகள், தீவிரவாத ஆதரவாளர்களைக் களையெடுங்கள் ...... 0
0
Reply
Rathna - Connecticut,இந்தியா
22 ஏப்,2026 - 09:32 Report Abuse
பஹல்கம் நிகழ்வில் பல தமிழ்நாட்டு குடும்பங்கள் கடைசி நேரத்தில் தப்பித்து கொண்டன. இல்லாவிட்டால் இது மிக பெரிய தேர்தல் பிரச்சனையாக உருவம் எடுத்து இருக்கும். ஹவாலா மற்றும் போதை தொழில் தமிழ்நாட்டின் பாதுகாப்பிற்கு மிக பெரிய சேதத்தை உண்டாக்கும். இந்த தொழில்களில் அரசியல் சக்திகளின் முதலீடு தொடர்கிறது.
இங்கே அரசியல்வாதிகள் வோட்டு வங்கிகாக தீவிரவாத சக்திகளுக்கு மறைமுக உதவி செய்வதை எல்லாரும் அறிவார்கள். கோவை தீவிரவாதம் என்பது தமிழ்நாட்டு பாதுகாப்பு இன்மைக்கு மிக சிறந்த உதாரணம். இதிலே தீவிரவாத மறைமுக ஆதரவு சக்திகள் தேர்தலில் போட்டி இடுகின்றன. இது மிக பெரிய ஆபத்து. மக்கள் இலவசங்களை நம்பி வோட்டு போடாமல் யார் தன், தனது குடும்பங்களை பாதுகாப்பார்கள் என்பதை புரிந்து வாக்கு அளிக்க வேண்டும். 0
0
Reply
சந்திரன் - ,
22 ஏப்,2026 - 09:31 Report Abuse
இந்தியாவில் ஊடுருவி கிடக்கும் தீவிரவாதிகளை அடையாளம் கண்டு என்கவுன்டர் செய்ய வேண்டும். இதன் மூலம் இந்தியா முதலில் சுத்தப்படுத்தப்படும். 0
0
Reply
RK - ,
22 ஏப்,2026 - 09:22 Report Abuse
இஸ்ரேல் போல் இந்தியாவும் தீவிரவாதத்திற்கு சகிப்புத்தன்மை இல்லாமல் அதிரடி நடவடிக்கைகளில் இறங்க வேண்டும் அவ்வப்போது. தீவிரவாதம் ஊட்டி வளர்க்கப்படும் மதங்களை தடை செய்ய வேண்டும். 0
0
Reply
GMM - KA,இந்தியா
22 ஏப்,2026 - 09:04 Report Abuse
இந்தியாவிற்கு எதிராக உள்நாட்டில் செயல்படும் மத குழுக்கள் அதிகரித்து வருகின்றன. இரட்டை கோபுர தாக்குதலில் அமெரிக்காவும், கோவை தொடர் குண்டு வெடிப்பில் இந்தியாவும் பாடம் கற்கவில்லை. கோவையில் ஒரு இஸ்லாமியர் கூட மரணிக்கவில்லை.? அது போல் பகல்காம். 0
0
SANKAR - ,
22 ஏப்,2026 - 10:46Report Abuse
red fort area bombing kku badiladi illayaa? 0
0
Reply
மேலும்
-
ஓட்டுச்சாவடிக்கு வந்து ஓட்டளித்த 103 வயது முதியவர், மூதாட்டி
-
திருப்போரூர் தொகுதியில் ஓட்டளித்த மக்கள்
-
வயலுாரில் இயந்திரம் பழுது :தாமதமாக ஓட்டுப்பதிவு
-
கிராமங்களில் ஆர்வமுடன் ஓட்டு போட்ட மக்கள்
-
ஓட்டுப்போட படகில் ஆபத்து பயணம் :தாங்கல்பெரும்புலம் கிராமத்தில் அவலம்
-
பூந்தமல்லி பசுமை ஓட்டுச்சாவடிகளில் வாக்காளர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு
Advertisement
Advertisement