வாரத்தின் ஏழு நாட்களும் எம்.எல்.ஏ., ஆபீஸ் இயங்கும் :அ.தி.மு.க.,- கந்தன் உத்தரவாதம்
சோழிங்கநல்லுார்:சோழிங்கநல்லுார் அ.தி.மு.க., வேட்பாளர் கந்தன், கோவிலம்பாக்கம், எஸ்.கொளத்துார் பகுதிகளில் பிரசாரம் செய்தார். பொது மக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அப்போது, கந்தன் பேசியதாவது:
சோழிங்கநல்லுார் தொகுதியின் முக்கிய உட்புற சாலைகளில் சிற்றுந்து சேவை துவங்கப்பட்டு, பிரதான சாலைகளை அடைய வசதி ஏற்படுத்தப்படும்.
தவிர, தொகுதி மக்களின் குறைகளை தீர்க்க, எம்.எல்.ஏ., அலுவலகம் வாரத்தின் ஏழு நாட்களும் திறந்திருக்கு. மாதந்தோறும் குறை தீர்ப்பு முகாம் நடத்தப்படுவதோடு, மக்களின் குறைகளை உடனடியாக தீர்க்கும் வகையில், பிரத்யேக மொபைல் போன் செயலி அறிமுகப்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்வில், கொள்கை பரப்பு துணை செயலர் லியோ சுந்தரம், அம்மா பேரவை துணை செயலர் மணிமாறன், பரங்கிமலை வடக்கு ஒன்றிய செயலர் விஸ்வநாதன், கோவிலம்பாக்கம் ஊராட்சி தலைவர் கீதா மணிமாறன், மாவட்ட இளைஞர் இளம்பெண் பாசறை செயலர் ராஜேஷ், மாவட்ட அம்மா பேரவை இணை செயலர் முருகன், பா.ஜ., மாவட்ட தலைவர் குமார், பா.ம.க., மாவட்ட செயலர் நிர்மல் குமார் உட்பட கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.
மேலும்
-
மருத்துவப்படிப்பு இடஒதுக்கீடு 7.5 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக உயர்த்தப்படும்' : சி.வி.சண்முகம் உறுதி
-
உலக ஆட்டிசம் தினம் விழிப்புணர்வு மாரத்தான்
-
ஈரான் ஐம்பது நாட்களாகியும் நடக்காத உச்ச தலைவரின் இறுதி சடங்கு
-
தேர்தல் வரலாற்றில் முதல் முறை ஓட்டுச்சாவடிகளில் 'கலர் பாதை'
-
'கமகம' மணத்துடன் தேர்தல் விழிப்புணர்வு
-
மேற்கு வங்க தேர்தல்; ரயில்கள் ஹவுஸ்புல்