தலையில் விழுந்த குடம்: நனைந்த தி.மு.க., நிர்வாகிகள்
கொரட்டூர் பேருந்து நிலையத்தில், தி.மு.க.,வினர் 50க்கும் மேற்பட்டோர் இணைந்து, மத்திய அரசு தாக்கல் செய்துள்ள, தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு தெரிவித்து, மசோதாவின் நகலை தீயிட்டு கொளுத்தினர். அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், குடத்தில் தண்ணீர் கொண்டு வந்து அணைக்க முயன்றனர்.
அப்போது தி.மு.க.,வினர் போலீசாருக்கு வழிவிடாததால், தலைக்கு மேல் குடத்தை துாக்கி பிடித்து, தண்ணீரை கீழே ஊற்றினர். அப்போது போலீஸ்காரரின் கையில் இருந்த தண்ணீர் குடம் நழுவி, தி.மு.க., நிர்வாகியின் தலையில் விழுந்தது. இதனால், தி.மு.க.,வினர் அதிர்ச்சி அடைத்து, 'எவன் டா மேல தண்ணீய ஊத்துனது' என குரலெழுப்பினர்.
பின், போலீஸ்காரரின் கையில் இருந்து குடம் தவறி விழுந்தது என தெரிந்ததும், ஏதும் பேசாமல் கலைந்து சென்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கிருஷ்ணராயபுரம் தி.மு.க., வேட்பாளர் கடவூர் மேற்கு ஒன்றியத்தில் பிரச்சாரம்
-
குளித்தலையில் துணை மின் நிலையம் தி.மு.க., வேட்பாளர் சந்திரன் வாக்குறுதி
-
ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் சின்னம் பொருத்தும் பணி
-
'தமிழகத்தை அமைதி பூங்காவாக மாற்ற இ.பி.எஸ்., முதல்வராக வேண்டும்'
-
ஸ்கூட்டர் வாங்க 25 ஆயிரம் ரூபாய் மானியம் அ.தி.மு.க., வேட்பாளர் செல்வகுமார் உறுதி
-
என்னை ரொம்ப எளிதாக சந்திக்கலாம்: விஜய் உறுதி
Advertisement
Advertisement