தமிழகத்தில் இதுவரை ரூ.1262 கோடி பணம், பரிசுப்பொருட்கள் பறிமுதல்

17


சென்னை: தமிழகத்தில் இதுவரை ரூ.1262 கோடி பணம், பரிசுப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என தமிழக தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.


சட்டசபை தேர்தல் நாளை (ஏப்ரல் 23) நடைபெற உள்ள நிலையில், சென்னையில் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:


* தமிழக சட்டசபை தேர்தல் பணிகளில் 3.60 லட்சம் பேரும், பாதுகாப்பு பணியில் 83 ஆயிரம் பேரும் ஈடுபட்டுள்ளனர்; 300 கம்பெனி துணை ராணுவம் தமிழகம் வரவழைக்கப்பட்டுள்ளன.


* 14.59 லட்சம் முதல் முறை வாக்காளர்கள் தேர்தலில் ஓட்டளிக்க தகுதி பெற்றுள்ளனர்.

* தமிழகத்தில் இதுவரை 4.18 லட்சம் தபால் ஓட்டுக்கள் பதிவாகியுள்ளன.



* தமிழகத்தில் இதுவரை ரூ.1,262 கோடி மதிப்புள்ள பணம், பரிசுப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இதில் ரொக்க பணம் மட்டும் ரூ.543 கோடி.
* தமிழகம் முழுவதும் 62 இடங்களில் ஓட்டுகள் எண்ணும் மையங்கள் அமைக்கப்பட உள்ளன.

* தற்போது வரை சி-விஜில் செயலி மூலம் 5634 புகார் வந்துள்ளன.

* வாக்குச்சாவடிக்குள் செல்போன்கள் எடுத்து செல்ல அனுமதி இல்லை, செல்போன்களை வெளியில் வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

* 85,875 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் 5.73 கோடி பேர் ஓட்டளிக்க தகுதி பெற்றுள்ளனர்.

இவ்வாறு அர்ச்சனா பட்நாயக் கூறினார்.

தினமலர் நேரலை



தமிழக தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் பேட்டி; தினமலர் யூடியூப் சேனல் உள்ளிட்ட இணையத்தில் நேரலை ஒளிபரப்பு செய்யப்பட்டது.

முழு பேட்டி பார்க்க இங்கே கிளிக் செய்யவும்

Advertisement