தாழ்வான மின்சார கம்பிகளால் அபாயம்

வாடிப்பட்டி: தனிச்சியம் பிரிவில் மதுரை நான்கு வழிச்சாலை சர்வீஸ் ரோட்டோரம் தாழ்வாக செல்லும் மின் கம்பிகள், ஒயர்களால் விபத்து அபாயம் உள்ளது.

மதுரை - திண்டுக்கல் நான்கு வழிச்சாலையில் ஏராளமான வாகனங்கள் மேம்பாலத்தில் செல்கின்றன. அலங்காநல்லுார் மற்றும் அலங்காநல்லுாரில் இருந்து மதுரை செல்லும் வாகனங்கள் இதன் சர்வீஸ் ரோட்டில் செல்கின்றன.

இங்குள்ள பஸ் ஸ்டாப் அருகே மின் கம்பிகள் நெடுஞ்சாலை துறை வைத்துள்ள அறிவிப்பு பலகையில் உரசும் அளவுக்கு தாழ்வாக செல்கிறது. கேபிள் ஒயர்களும் மிகத்தாழ்வாக செல்கின்றன.

இதன் கீழ் அமைக்கப்பட்டுள்ள நடைபாதையை பயன்படுத்தும் கிராமத்தினர் மின் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. சிறுவர்கள் விளையாட்டாக கேபிள் ஒயரை பிடித்தபடி நடக்கின்றனர். மின் வாரிய அதிகாரிகள் ஆபத்தான கம்பிகளை உயர்த்தி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராமத்தினர் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement