அம்பேத்கர் பிறந்த நாள் விழா தங்கவயலில் கொண்டாட்டம்

தங்கவயல்: தங்கவயலில் உள்ள அம்பேத்கர் சிலைகளுக்கு சமுதாய அமைப்புகள், அனைத்து அரசியல் கட்சிகள், அரசு ஊழியர்கள், பொதுநல அமைப்பினர் மாலைகள் அணிவித்தனர்.

கர்நாடகாவில் ஒரே தொகுதியில் 20 இடங்களில் அம்பேத்கர் சிலை அமைக்கப்பட்டிருப்பது தங்கவயலில் மட்டுமே. ஏப்ரல் 14ல் அம்பேத்கர் ஜெயந்தி; டிசம்பர் 6 ல் அவரின் நினைவு நாள்.

இந்த இரு நாட்களில், தொகுதியில் அனைத்து கட்சியினரும் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிப்பதை மறந்தது இல்லை. சிலையின் முகத்தை மறைக்கும் அளவுக்கு மலர் மாலைகள் அணிவிப்பது வழக்கம்.

தங்கவயல் முழுதும் நேற்று அம்பேத்கர் ஜெயந்தி கொண்டாடப்பட்டது. பல இடங்களில் உணவு, இனிப்புகள், மோர், பானகம் வழங்கினர். கென்னடிஸ் பகுதியில் மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கினர்.

நகராட்சி மைதானத்தில் கால்பந்து விளையாட்டு போட்டி நடந்தது. மலையாளி மைதானத்தில் பெண்களுக்கு சேலைகள், மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டன.

பெமல் ஆலமரம் பகுதியில் மெல்லிசை கச்சேரி நடத்தப்பட்டது. தங்கவயல் நகராட்சி சார்பில் அம்பேத்கர் தேர் பவனி நடந்தது.

Advertisement