சிறைகளில் அடைக்கப்பட்டவர்கள் ஓட்டளிக்க முடியாது; ஐகோர்ட் உத்தரவு

2

சென்னை: குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டவர்கள் ஓட்டளிக்க முடியாது என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.


மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு, குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஹரி நாடார், தேர்தலில் ஓட்டளிக்க அனுமதிக்க கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு இன்று (ஏப்ரல் 22) தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள் முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஹரிநாடாருக்கு எதிராக 3 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.



அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ''மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி தண்டிக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டவர்களை வாக்களிக்க அனுமதிக்க முடியாது'' என உத்தரவிட்டனர்.


இந்த சட்டப்பிரிவை உச்சநீதிமன்றமும் உறுதி செய்துள்ளதால், ஓட்டளிக்க முடியாது என கூறி, ஹரிநாடாரின் மனுவை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்துள்ளது.

Advertisement