மனைவிக்கு மிரட்டல் விடுத்த பெற்றோர் மீது புகார் செய்த மகன்
நெலமங்களா: காதல் திருமணம் செய்த என் மனைவியின் ஜாதி பெயரை சொல்லி திட்டியும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் தன் பெற்றோர் மீது, மகன் போலீசில் புகார் அளித்து உள்ளார்.
பெங்களூரு நெலமங்களாவின் சுபாஷ் நகரை சேர்ந்தவர்கள் முனிசங்கரய்யா - ஆனந்தம்மா தம்பதி. இவர்களின் மகன் அபிஷேக். இரண்டு ஆண்டுகளுக்கு முன், தான் வேலை செய்யும் இடத்தில், தான் வசிக்கும் பகுதியை சேர்ந்த வித்யாஸ்ரீ என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.
நாளடைவில் இது காதலாக மாறியது. இருவரும் திருமணம் செய்து கொள்ள விரும்பினர். வெவ்வேறு ஜாதியை சேர்ந்தவர்கள் என்பதால், இருவரின் வீட்டினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் எட்டு மாதங்களுக்கு முன், இருவரும் வீட்டை விட்டு வெளியேறி, காரி காட்டேரம்மா கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். ஆனாலும், இருவரின் குடும்பத்தினரும் ஏற்றுக் கொள்ளவில்லை.
தம்பதி இருவரும் தனியாக வசித்து வருகின்றனர். தற்போது ஆறு மாதம் கர்ப்பமாக உள்ள வித்யாஸ்ரீயை, அபிஷேக்கின் பெற்றோர் ஜாதி பெயரை சொல்லி திட்டி கொலை மிரட்டல் விடுத்தனர்.
இதனால் அச்சமடைந்த அபிஷேக், நெலமங்களா டவுன் போலீசில், தன் மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக, தன் பெற்றோர் மீது புகார் அளித்துள்ளார். போலீசார் விசாரிக்கின்றனர்.
மேலும்
-
இளைஞர்களைக் கவர பிள்ளைகளை பிரசாரத்தில் இறக்கும் வேட்பாளர்கள்: அடுத்த தலைமுறை அரசியல்வாதிகள் ‛‛ரெடி''
-
குடும்ப அரசியல் வீழ 2026 தேர்தல் முடிவு முக்கியம்: அண்ணாமலை
-
பார்லி., சிறப்பு கூட்டத்தொடர் துவங்கியது; மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு மசோதா தாக்கல்
-
சென்னையில் ரூ.245 கோடி தங்க, வைர நகைகள் பறிமுதல்; பறக்கும் படை நடவடிக்கை
-
ஆந்திராவில் வேன் மீது டேங்கர் லாரி மோதி விபத்து; கர்நாடகா பக்தர்கள் 8 பேர் பலி
-
உட்கட்டமைப்பில் உலகளவில் உயரும் நம் நகரங்கள்; முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்