பொறுப்பை தட்டி கழித்த நசீர் அகமது: சிவகுமார்

பொறுப்பை தட்டி கழித்த நசீர் அகமது: சிவகுமார்



துணை முதல்வர் சிவகுமார், பெங்களூரு குயின்ஸ் சாலையின் காங்கிரஸ் அலுவலகத்தில் அளித்த பேட்டி:

தாவணகெரே தெற்கு தொகுதிக்கு சென்று, அதிருப்தி தலைவர்களை சமாதானம் செய்யும்படி, நசீர் அகமதுவுக்கு கட்சி உத்தரவிட்டிருந்தது. ஆனால் அந்த பொறுப்பை செய்வதில், அவர் தவறியுள்ளார்.

இது தொடர்பாக, முதல்வர் சித்தராமையா அறிக்கை பெற்று, கட்சியின் நலனை கருதி முடிவு செய்துள்ளார்.

தாவணகெரேவில் என்ன நடந்தது என்பது குறித்து, எனக்கு அறிக்கை வர வேண்டியுள்ளது. எந்த கட்சியாக இருந்தாலும், ஒழுங்கு என்பது மிகவும் முக்கியம். அனைவருடனும் ஆலோசனை நடத்தியே, வேட்பாளரை தேர்வு செய்தோம். அதன்பின் தலைவர்களுடன், நாங்கள் தொடர்பில் இருந்தோம்.

அரசியல் என்ற பின், நாங்கள் எங்கள் எம்.எல்.ஏ.,க்களுடன் ஆலோசனை நடத்தி, முடிவு எடுக்க வேண்டும். யாருக்கு என்ன சொல்ல வேண்டும், யாருக்கு என்ன வழி காட்ட வேண்டுமோ, அதை செய்கிறோம்.

ஜி.பி.ஏ., தேர்தல் உள்ளாட்சி தேர்தல் குறித்து, எம்.எல்,ஏ.,க்களுடன் ஆலோசனை நடத்துவது, கட்சி தலைவனான என் கடமை. இந்த பணியை நான் செய்யாமல், வேறு யார் செய்வர்.

எம்.எல்.ஏ.,க்கள் டில்லி சென்றதும், அமைச்சர் பதவி கேட்பதும் தவறு இல்லை. அவர்கள் தங்களின் கோரிக்கைகளை கூறட்டும். ஆனால் கட்சியில் ஒழுங்குடன் இருக்க வேண்டும். ஒழுங்கை காப்பாற்ற வேண்டும். ஊடகங்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் போது, எச்சரிக்கையுடன் இருக்கும்படி ஆலோசனை கூறியுள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement