மேரி பிஸ்கட் அண்ணன்; மெர்சல் ஆகும் பெண்கள்
தி.மு.க., வேட்பாளரை கண்டு, 100 நாள் வேலை திட்ட பெண்கள் பலரும் அலறியடித்து ஓடுவதால், அக்கட்சியினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மாதவரம் தொகுதியில், தற்போதைய எம்.எல்.ஏ.,வாக இருப்பவர் சுதர்சனம். ம.தி.மு.க.,வில் இருந்து வந்த அவர், தொடர்ந்து இருமுறை வென்று மூன்றாவது முறையாக தி.மு.க., சார்பில் போட்டியிடுகிறார். சிக்கனமாக செலவு செய்யக்கூடியவர் என்று, கட்சி நிர்வாகிகளிடம் பெயரெடுத்தவர்.
நிகழ்ச்சிகளுக்கு செல்லும்போது, சாலையோரங்களில் பணியில் உள்ள 100 நாள் திட்ட பெண் தொழிலாளர்கள், துப்புரவு பெண் தொழிலாளர்களை சந்திப்பது வழக்கம்.
தனது காரில் இருந்து, ஐந்து ரூபாய் 'மேரி பிஸ்கட் பாக்கெட்' எடுத்து கொடுத்து சாப்பிட சொல்லி, நீண்ட நேரம் அவர்களுடைய சொந்த பிரச்னைகள், குடும்ப கஷ்டங்கள் குறித்து கேட்டறிவார். ஆனால், எந்த குறையையும் சரிசெய்ய உதவ மாட்டார். மணிக்கணக்கில் பேசுவதால், அவரது கார் அவ்வழியாக சென்றால், 100 நாள் திட்ட பெண்கள், குளத்திற்குள்ளும், புதர்களுக்குள்ளும் இறங்கி சென்று பணி செய்வது போல பாவனை காட்டுவர்.
எம்.எல்.ஏ., சென்ற பின், மீண்டும் வெளியே வந்து, சாலையோர மரத்தடியில் அமர்ந்து கொள்வர். பிரசாரத்திற்காக எம்.எல்.ஏ., தொகுதி பக்கம் வரும்போது, 'மேரி பிஸ்கட் அண்ணன் வர்றாரு ஓடுங்கடி' என, பெண் தொழிலாளர்கள் ஓட்டம் பிடிக்கின்றனர்.
பிரசாரத்திற்கு உடன் வந்தால் சிறப்பான கவனிப்பு நடக்கும் என, கட்சி நிர்வாகிகள் கூறினாலும் கூட, 'அவரை பற்றி எங்களுக்கு தெரியாதா' என கூறிவிட்டு பெண்கள் ஒதுங்கி விடுகின்றனர்.
வாசகர் கருத்து (5)
S.V.Srinivasan - Chennai,இந்தியா
15 ஏப்,2026 - 12:27 Report Abuse
இதை தேர்தல் அன்று வாக்கு சாவடியில் காட்டுங்கள் பெண்களே. 0
0
Reply
Rathna - Connecticut,இந்தியா
15 ஏப்,2026 - 11:26 Report Abuse
மேரி பிஸ்கட் கொடுத்து தங்க பிஸ்கட்டாக தேத்தி உள்ளார் என்பது புரிகிறது. 0
0
Reply
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
15 ஏப்,2026 - 10:45 Report Abuse
நல்ல ‘nick name ‘ விரைவில் தொகுதியில் அவருக்கு அந்த பெயரே நிலைத்துவிடும், 10 ரூ . என்றதுமே யாரோ நினைவுக்கு வருவது போல 0
0
Reply
duruvasar - indraprastham,இந்தியா
15 ஏப்,2026 - 08:45 Report Abuse
திமுகவில் 3 வது முறை சீட் கிடைத்தவர்க்கெல்லாம் கட்சி தலைமைக்கு அளந்து கொடுக்காமல் வாரி கொடுத்திருக்கிறார்கள் என்று அர்த்தம். 0
0
Reply
Dr. Suriya - சோழ நாடு, பாரதம்.,இந்தியா
15 ஏப்,2026 - 05:51 Report Abuse
பார்த்து பெண்களே... 0
0
Reply
மேலும்
-
இந்தியாவுக்கு எதிரான செயல்களுக்கு பதிலடி நிச்சயம்; பஹல்காம் தாக்குதல் நினைவு நாளில் ராணுவம் எச்சரிக்கை
-
யார் உங்கள் வேட்பாளர்?
-
அண்ணாமலை, வானதி ஒரே ஸ்கூட்டரில் பிரசாரம்; பா.ஜ., தொண்டர்கள் மலர் துாவி ஆரவாரம்
-
பா.ஜ., வேட்பாளர் முருகனுக்கு ஆதரவாக ம.பி. முதல்வர் மோகன் யாதவ் 'ரோடு ஷோ'
-
தி.மு.க., ஆட்சி அடித்து விரட்டப்பட வேண்டிய தீய ஆட்சி: எச்.ராஜா
-
ஓட்டுக்கு பணம் கொடுப்பதும் தப்பு வாங்குவதும் தப்பு: சொல்கிறார் செந்தில் பாலாஜி
Advertisement
Advertisement