ஓட்டுச்சாவடிக்கு வந்து ஓட்டளித்த 103 வயது முதியவர், மூதாட்டி

பொன்னேரி: மீஞ்சூர் அடுத்த வல்லுார் ஓட்டுப்பதிவு மையத்தில், முதியவர் ஸ்டீபன், 103, ஓட்டுச்சாவடிக்கு நேராக வந்து தன் ஓட்டை பதிவு செய்தார்.

கடந்த 1923ல் பிறந்த இவர், பிரிட்டிஷ் கால தேர்தல்களையும், 1950 பிறகு இந்திய தேர்தல்களிலும் ஓட்டு போட்டுள்ளார். இந்திய தேர்தல் ஆணையம், 85 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள், வீட்டில் இருந்தபடியே தபால் ஓட்டு போட வசதி ஏற்படுத்திருந்த நிலையிலும், ஓட்டுப்பதிவு மையத்தில் ஓட்டு போட வேண்டும் என்ற ஆர்வத்தில் வந்ததாகவும், அது மகிழ்ச்சியாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், தன்னை போல் அனைவரும் தவறாமல் ஓட்டுப்போட வேண்டும் எனக் கேட்டு கொண்டார். மீஞ்சூர் அடுத்த புதுப்பேடு கிராமத்தில் மூதாட்டி ஈஸ்வரி, 102, ஓட்டுப்பதிவு மையத்திற்கு தள்ளாத நிலையிலும், வீல் சேரில் வந்து ஓட்டுப்போட்டு சென்றார்.

Advertisement