இன்று மாலை 6 மணிக்கு பிரசாரம் ஓய்கிறது; தேர்தல் கமிஷன் கிடுக்கிப்பிடி உத்தரவு
நமது நிருபர்
தமிழக சட்டசபை தேர்தலுக்கான தேர்தல் பிரசாரம இன்று (ஏப்ரல் 21) மாலை 6 மணியுடன் நிறைவடையும் நிலையில் அதற்குமேல் பொதுக்கூட்டம், ஊர்வலம் நடத்தவோ, அதில் பங்கேற்கவோ கூடாது. வாக்காளர்கள் அல்லாதோர் தொகுதியில் இருக்கக்கூடாது என தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 23ம் தேதி காலை காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடக்கிறது. இதனையொட்டி இன்று மாலை 6 மணி முதல் தேர்தல் பிரசாரம் ஓய்கிறது. இதனால் பல்வேறு கிடுக்கிப்பிடி உத்தரவுகளை தேர்தல் கமிஷன் பிறப்பித்துள்ளது. இது குறித்து தமிழக தலைமைத்தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
* தேர்தல் தொடர்பாக எந்த வித பொதுக்கூட்டத்தையோ ஊர்வலத்தையோ யாரும் ஒருங்கிணைக்கவோ, நடத்தவோ அல்லது அவற்றில் பங்கேற்கவோ கூடாது. தேர்தல் விவகாரத்தையும், திரைப்படம், தொலைக்காட்சி, எப்.எம். ரேடியோ, வாட்ஸ்-அப், முகநூல், டுவிட்டர் உள்ளிட்ட எந்த சாதனம் மூலம் பொது மக்களின் பார்வைக்கு வைக்கக் கூடாது. குறுஞ்செய்தி மற்றும் இணையம் உட்பட அனைத்து மின்னணு வடிவிலான தகவல் தொடர்பையும் இது உள்ளடக்கும்.
* பொதுமக்களில் எந்தவொரு நபரையும் ஈர்க்கிற வகையில், இசை நிகழ்ச்சி, திரையரங்கச் செயல்பாடு, பிற கேளிக்கை உள்ளிட்ட பொழுதுபோக்கு நிகழ்ச்சியை நடத்த கூடாது. அதன் மூலம் பொதுமக்களிடம் தேர்தல் விவகாரத்தையும், பிரசாரம் செய்யக் கூடாது. விதிமுறைகள் மீறப்பட்டால் 2 ஆண்டுகள் சிறை அல்லது அபராதம் அல்லது இவை இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.
* தொகுதிக்கு வெளியில் இருந்து அழைத்து வரப்பட்ட அனைத்து அரசியல் கட்சி நிர்வாகிகள், கட்சிப் பணியாளர்கள் மற்றும் அத்தொகுதியின் வாக்காளர்கள் அல்லாதோர் இன்று மாலை 6 மணிக்கு மேல் அத்தொகுதியை விட்டு வெளியேற வேண்டும்.
* கல்யாணமண்டபம், சமுதாயக்கூடம், தங்கும் விடுதிகள், விருந்தினர் இல்லம் ஆகிய இடங்களில் வெளியாட்கள் தங்கியுள்ளனரா? என்பதை கண்டறியப்படும்.
* வேட்பாளர்களுக்கு வழங்கப்பட்ட நட்சத்திர பேச்சாளர்கள் உள்பட வாகன அனுமதிகள், இன்று மாலை 6 மணி முதல் செயல்திறனற்றதாகிவிடும். வாக்காளர்களை வாக்குச்சாவடிக்கு அழைத்து வருவதற்கும், வாக்குச் சாவடிகளிலிருந்து அழைத்துச் செல்வதற்கும் வேட்பாளர் அல்லது அவரது முகவர் வாகனத்தை வாடகைக்கு எடுப்பதற்கு அல்லது வாங்குவதற்கு அல்லது பயன்படுத்துவதற்கு எந்தவொரு வேட்பாளரும் அனுமதிக்கக்கூடாது.
* இது தண்டிக்கப்பட வேண்டிய முறைகேடான செயலாகும். 2 நபர்களை மட்டுமே கொண்ட, வேட்பாளர்கள், அரசியல் கட்சிகளின் தேர்தல் அலுவலகம் வாக்குச் சாவடியிலிருந்து 100 மீட்டர்கள் தொலைவிற்கு வெளியே அமைக்கப்படலாம். தேவையில்லாத கூட்டத்தை அவர்கள் அனுமதிக்கக் கூடாது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கேவலமான ஜனநாயகம் தேர்தல் என்ற போர்வையில் ஊழல் வாதிகளை ஊக்குவிக்கிற ஆனையம் தமிழக காவல்துறையே பணத்தை கொடுத்து திமுக அயோக்கியர்களுக்கு ஓட்டு போடச்சொல்கிறார்கள் கேவலமான நாடு நாசபோய் சாவுங்கள்
பணம் தருபவர்களை மட்டும் அல்ல , பணம் வாங்கியவர்களை கைது செய்யுங்க ஜெயில்ல தள்ளுங்க பணம் வாங்கினவங்க மேல தேர்தல் கமிஷனே கேஸ் போட்டு அலையவிடுங்க ஒருத்தன் வாங்கமாட்டான் பணம் தந்தால் தேர்தல் வாக்குப்பதிவு நிறுத்தம் என்று ஏன் அறிவிப்பு செய்யமாட்டேங்கறீங்க தேர்தல் கமிஷன் அதிகாரிகளே ???
பலப் பல ஆயிரம் கோடிகள் பணம் பட்டுவாடா ஆகியிருக்கிறது... தேர்தல் கமிஷன் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும்போது...
என்னத்த கிடுக்கி போட்டு என்னத்த பண்றது. அவனுக விடிய விடிய பிரச்சாரம் பண்ணுவானுக. தேர்தல் அன்னைக்கு வாக்கு பதிவு மையத்தின் முன் கூட பிரச்சாரம் பண்ணுவானுக. தேர்தல் கமிஷன் கண்டுக்க மாட்டாங்க.
Worthless /useless corruption commission,
as money is distributed everywhere in . I understand that money was distributed in manapakkam , nandanbakkam areas on Sunday. It s a SHAM and the election corruption commission does nt have any shame whatsoever.
என்னென்ன உத்தரவுகள் போட்டாலும் பணம் பட்டுவாடாவை தடுக்க முடியாது
அதான் ஏற்கனவே 1கே 1.5 கே 2கே 3கே என்று இடத்திற்கு ஏற்ற வகையில் நடந்து விட்டதே
முதலில் கோயமுத்தூரில் தேர்தல் கமிஷன் வேலை செய்கிறதா
பணப்பட்டு வாடா பண்றது வீடியோ எடுத்து நிறைய பேர் அனுப்பி இருக்காங்க ஆனா அதுக்கு என்ன ஆக்சன் எடுக்கல என்ன கிடுக்கிப்பிடி இது சம்பந்தமா ஒரு செய்திகளும் வரவில்லைமேலும்
-
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தி.மு.க., கூட்டணி வெற்றி பெறும்; வசந்தம் கார்த்திகேயன் உறுதி
-
பா.ஜ., விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளர் புவனேஸ்வரி தி.மு.க., வில் ஐக்கியம்
-
நல்லாட்சி அமைய அ.தி.மு.க., வுக்கு வாக்களியுங்கள்; வேட்பாளர் குமரகுரு பேச்சு
-
அனுமதியின்றி சைக்கிள் பேரணி: த.வெ.க., வேட்பாளர் மீது வழக்கு
-
சேவை செய்ய வாய்ப்பு தாருங்கள் : பா.ம.க., வேட்பாளர் செழியன் வேண்டுகோள்
-
பணத்தை வீசி சென்ற கட்சியினர் கள்ளக்குறிச்சி போலீசார் விசாரணை