தொகுதி மறுவரையறை: தமிழகத்தில் நாளை கருப்புக் கொடி போராட்டம்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

74


சென்னை: தொகுதி மறுவரையறைக்கு எதிராகத் தமிழகம் முழுவதும் வீடுகளிலும், பொது இடங்களிலும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம் நாளை (ஏப்ரல் 16) நடக்கும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.


அவரது அறிக்கை: உயரட்டும் கருப்புக்கொடி; தமிழகம் போராடும்; தமிழகம் வெல்லும்; இந்தியாவின் வளர்ச்சிக்காகப் பாடுபட்ட குற்றத்துக்காக தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்களுக்குத் தண்டனையா? மத்திய பாஜ அரசு நாளை பார்லிமென்டில் கொண்டு வர உள்ள தொகுதி மறுவரையறை சட்டத்திருத்தம் தமிழகத்துக்கும், தென்மாநிலங்களுக்கும் இழைக்கப்படும் மாபெரும் வரலாற்று அநீதி.

விந்திய மலைக்குத் தெற்கே உள்ள தென்னிந்தியர் ஒவ்வொருவரும் கொதித்துப் போயிருக்கிறோம். நெருப்போடு விளையாடுகிறது பாஜ. தொகுதி மறுவரையறைக்கு எதிராகத் தமிழ்நாடு முழுவதும் வீடுகளிலும், பொது இடங்களிலும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம் நாளை நடக்கும்.



தமிழகத்தின் குரலை மதித்து மத்திய அரசு பின்வாங்கவில்லை என்றால், அதற்கான விளைவுகளை நீங்கள் சந்திக்க வேண்டி இருக்கும். இதற்காக, மிகப் பெரிய விலையை நீங்கள் கொடுக்க வேண்டி இருக்கும். திமுக தலைவராக, அனைத்துக்கும் மேல் சுயமரியாதையுள்ள தமிழனாக மீண்டும் எச்சரிக்கிறேன். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

முதல்வர் வீடியோ



தொகுதி மறுவரையறை விவகாரம் குறித்து வீடியோ ஒன்றையும் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டு இருக்கிறார்.

வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்

Advertisement